இந்திய -சீன எல்லை பிரச்சனை: பேச்சுவார்த்தை துவங்கியது| Dinamalar

இந்தியா

இந்திய -சீன எல்லை பிரச்சனை: பேச்சுவார்த்தை துவங்கியது

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (4)
Share
லே: கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு மே மாதம் சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றன. அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. இதையடுத்து, எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கிக் கொள்வது குறித்து பல சுற்று பேச்சுகள்நடத்தப்பட்டன. ஜூலை 31ம் தேதி, 12வது சுற்று பேச்சு நடந்தது. இதையடுத்து கோக்ரா உள்ளிட்ட இடங்களில் இருந்து படைகள் விலக்கிக்
இந்தியா, சீனா, எல்லைபிரச்சனை, பேச்சு

லே: கிழக்கு லடாக்கில் கடந்தாண்டு மே மாதம் சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றன. அதை நம் படைகள் தடுத்து நிறுத்தின. இதையடுத்து, எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன. படைகளை விலக்கிக் கொள்வது குறித்து பல சுற்று பேச்சுகள்
நடத்தப்பட்டன. ஜூலை 31ம் தேதி, 12வது சுற்று பேச்சு நடந்தது. இதையடுத்து கோக்ரா உள்ளிட்ட இடங்களில் இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.


latest tamil news




இதற்கிடையே உத்தரகண்டின் பராஹோத்தி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்க் பகுதிகளில் நுழைய முயன்ற சீன ராணுவத்தின் சமீபத்திய முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது குறித்து, இரு ராணுவத்தின் 13வது சுற்று பேச்சு இன்று துவங்கியது. சீனாவின் மோல்டோவில் இந்த பேச்சு நடக்கிறது. இதில், படைகளை விலக்கிக் கொள்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X