போதைப் பொருள் கடத்தல் விவகாரம்: கவலையில் சரத் பவார்

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
மும்பை: போதை பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யான் கான். இந்த விவகாரம் தினசரி வட மாநில ஊடகங்களில் அலசப்படுகிறது.இது குறித்து மஹாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் சிவசேனா வாயைத் திறக்கவில்லை.ஆனால் சிவசேனாவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த

மும்பை: போதை பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யான் கான். இந்த விவகாரம் தினசரி வட மாநில ஊடகங்களில் அலசப்படுகிறது.இது குறித்து மஹாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் சிவசேனா வாயைத் திறக்கவில்லை.



latest tamil news


ஆனால் சிவசேனாவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் ஆர்யான் விவகாரத்தில் கலக்கம் அடைந்துள்ளன. குறிப்பாக சரத் பவார் பீதியில் உள்ளார்.

காரணம் இந்த விவகாரத்தால் தன் கட்சிக்கு பெரும் பிரச்னை வரும் என நினைக்கிறார். பவாருக்கு மிகவும் நெருக்கமானவர், அவரது கட்சியின் மூத்த தலைவரான நவாப் மாலிக். இவர் இப்போது மஹாராஷ்டிரா அரசில் அமைச்சர். போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் நவாப் மாலிக்கின் மருமகன்சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். 'இதற்கும், ஆர்யான் கைதிற்கும் தொடர்பு உள்ளது. மிகப் பெரிய போதை பொருள் கடத்தும் வெளிநாட்டு கும்பலின் தொடர்பு உள்ளது' என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.


latest tamil news


விசாரணை வேகம் பிடித்தால், தன் கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் சிக்கலாம் என அஞ்சுகிறாராம் பவார். இன்னொரு பக்கம் போதை தொடர்பான விவகாரத்தில் பவார் கட்சி அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித் துறையும் அதிரடிச் சோதனை நடத்தி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
10-அக்-202120:11:54 IST Report Abuse
sundarsvpr ஒருவன் தவறு செய்தால் அந்த தவறுக்கு அவன்தான் பொறுப்பு. இது ராமாயண கால தர்மத்திற்கு ஏற்புடையதாக இருக்கும். (வேடன் வாலமீகி ஆக ஆனது) கலியுக தர்மம் வேறு.. அதனை சட்டம் ஆகவேண்டும் அதாவது பலனை அனுபவித்தவர்களுக்கும் தண்டனை இருக்கவேண்டும் அரசியல்வாதி விவகாரத்தில் நடக்காது அரசியலில் தண்டனை குடும்ப வாரிசுகள் பலன் பதவி அடைவது .
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
10-அக்-202118:35:39 IST Report Abuse
தமிழ்வேள் மஹாராஷ்ட்ர கட்டுமரம் இந்த பவார் ......
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
10-அக்-202118:34:39 IST Report Abuse
தமிழ்வேள் காங்கிரஸ் கால தொடர்புகளையும் கொஞ்சம் தோண்டிப்பார்க்கவேண்டும் ....பாகிஸ்தான் போதை வியாபார கும்பல் தாவூத் இப்ராஹிம் கோஷ்டி போன்றவற்றோடு நெருங்கிய தொடர்புகளை வெகுகாலமாக வைத்துக்கொண்டிருப்பவன் இவன் ....மஹாராஷ்டிர மாநிலத்தை பிரித்து விதர்பா மாநிலம் உருவாக்கவேண்டும் ...மும்பை தனி யூனியன் பகுதியாக்க வேண்டும் ..தேசவிரோத தொடர்புகள் மும்பபையில் இவனால் மிக அதிகமாகிவிட்டது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X