சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்சிகளிடையே மோதல்

Added : அக் 10, 2021
Share
Advertisement
l மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம், செட்டிப்புண்ணியம், வேண்பாக்கம் ஆகிய ஓட்டுச்சாவடிகளில், ஓட்டளிக்க வருவோரிடம் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரித்தனர். அப்போது, இரு தரப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார், தகராறை தடுத்து கூட்டத்தை கலைத்தனர்l திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலுக்கு ஓட்டளிக்க, பெண் வாக்காளர் ஒருவர் அரசு
 கட்சிகளிடையே மோதல்

l மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம், செட்டிப்புண்ணியம், வேண்பாக்கம் ஆகிய ஓட்டுச்சாவடிகளில், ஓட்டளிக்க வருவோரிடம் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரித்தனர்.

அப்போது, இரு தரப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார், தகராறை தடுத்து கூட்டத்தை கலைத்தனர்l திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலுக்கு ஓட்டளிக்க, பெண் வாக்காளர் ஒருவர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேற்று வந்தார். அவரது அடையாள அட்டையில் காஞ்சனா என்ற பெயர், அவரது புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

ஆனால் வாக்காளர் பட்டியலில் காஞ்சனா என்ற பெயருக்கு பதில் பிரகாஷ் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அடையாள அட்டை எண் ஒன்றாக இருந்தும் அவரை தேர்தல் அதிகாரிகள் ஓட்டளிக்க விடவில்லை. வாக்குவாதத்திற்கு பின் தேர்தல் அதிகாரிகள், அப்பெண்ணை ஓட்டளிக்க அனுமதித்தனர்l செங்கல்பட்டு அடுத்த, ஆலப்பாக்கம் ஊராட்சி வேண்பாக்கம் நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், அ.தி.மு.க. சார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மோகனப்ரியா நேற்று ஓட்டளிக்க வந்தார்.

அவரை தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனால் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. l சந்தவேலுார் ஊராட்சி, சுங்குவார்சத்திரம் நடுநிலைப் பள்ளி ஓட்டுச்சாவடிக்குள் வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீசாருக்கும் வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுl சித்தாமூர் ஒன்றியம் சூணாம்பேடு ஊராட்சியின் வில்லிப்பாக்கம் பகுதியில், 12ம் வார்டு ஓட்டுகள், 14ம் வார்டிலும், 14ம் வார்டு ஓட்டுகள் 12ம் வார்டிலும் மாற்றப்பட்டதால், பல வாக்காளர்கள் அதிருப்தியடைந்து, வெண்ணாங்குபட்டு சாலையில் மறியல் செய்தனர். போலீசார் அறிவுரைக்கு பின் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X