பொது செய்தி

தமிழ்நாடு

'ஒரு மாணவருக்கு ஒரு மரம்' திட்டம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
விருதுநகர்பருவகால மாற்றங்கள், நீர் மாசு, புகையால் ஏற்படும் நோய் அபாயம் குறித்து மக்களிடம் நல்லதோர் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பூமியின் பசுமையை மீட்டெடுக்க மரக்கன்றுகள் நடுவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல தன்னார்வலர்கள் தானாக முன்வந்து மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி வருகின்றனர். மாசுப்படுத்தக்கூடிய காரணிகளை குறைப்பது

விருதுநகர்பருவகால மாற்றங்கள், நீர் மாசு, புகையால் ஏற்படும் நோய் அபாயம் குறித்து மக்களிடம் நல்லதோர் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பூமியின் பசுமையை மீட்டெடுக்க மரக்கன்றுகள் நடுவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல தன்னார்வலர்கள் தானாக முன்வந்து மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்து கூறி வருகின்றனர். மாசுப்படுத்தக்கூடிய காரணிகளை குறைப்பது மட்டுமின்றி இயற்கை வளத்தை அதிகரிப்பது தான் பூமிக்கு புத்துயிர் அளிக்கும். கிராமப்பகுதிகளை போல் நகர்ப்பகுதிகளையும் பசுமையாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மாணவர்களிடம் இருந்து துவங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அந்த வகையில் 2020ல் மத்திய அரசின் 'ஒரு மாணவர் - ஒரு மரம்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மூலம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தாங்கள் பயிலும் காலங்களில் ஒரு மரத்தையாவது நட வேண்டும். துவக்கத்தில் இத்திட்டம் வடமாநில பல்கலை, கல்லுாரிகள், கேந்திரிய வித்யாலயாக்களில் வேகமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக மாணவர்கள் யாரும் வர முடியாத சூழல் நிலவியது. தற்போது மீண்டும் பள்ளி, கல்லுாரிகள் செயல்பட துவங்கி உள்ளதால் அனைவருக்கும் முன்னோடியாக விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் இருந்து இதற்கான முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. தாவரவியல் துறை மூலம் தாவரவியல் தோட்டத்தில் 75 மாணவர்கள் 75 மூலிகை மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.அருநெல்லி, ராமசீத்தாப்பழம், ஆடாதோடை, நாவல், பாதாம், மகிலா, சரக்கொன்றை, இலுப்பை, தைல மரம், செண்பகம், சிகைக்காய் உள்ளிட்ட அரிய மர வகைகள் நடப்பட்டுள்ளது. மாணவர்களே மரங்களை பராமரிப்பதன் மூலம் வீடுகளின் அருகில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாய்ப்புக்கும் வழி பிறந்துள்ளது. தாங்கள் நட்ட மரம் என்பதால் நிச்சயம் சிறப்பான கவனத்துடன் மரங்களை பராமரிப்பர். கல்லுாரி நிர்வாகத்தின் இந்த செயல்பாடு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.அரிய மரங்களால் கூடுதல் சிறப்புபி.சுந்தரபாண்டியன், முதல்வர், செந்திக்குமார நாடார் கல்லுாரி, விருதுநகர்: கல்லுாரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டும் ஒரு மாணவர் ஒரு மரம் என்ற மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 75 மாணவர்கள் மரம் நட்டுள்ளனர். இத்திட்டத்தை எங்கள் கல்லுாரியில் செயல்படுத்துவதை பெருமையாக நினைக்கிறோம். ஏற்கனவே கல்லுாரி வளாகத்தில் நிறைய மரங்கள் உள்ளன. தாவரவியல் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மரங்கள் அரிய வகை என்பதால் கூடுதல் சிறப்பை பெறுகின்றன. இவை தவிர மாணவர் பிறந்த நாள், கல்லுாரி நிர்வாகிகளின் பிறந்த நாள், முக்கிய நாட்களின் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். பல கோயில்களில் தல விருட்சங்களாக உள்ள மரங்களையும் நடவு செய்துள்ளோம்.மாணவர்களிடம் இருந்து துவங்குவதே சரிநிர்மல்குமார், பேராசிரியர், தாவரவியல்துறை: பேராசிரியர் மகேந்திரபெருமாளுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தோம்.ஒரே நேரத்தில் 75 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மாணவர்கள் தான் நாட்டின் எதிர்கால செல்வங்கள். பசுமையை மீட்டெடுக்கும் பணியை அவர்களிடம் இருந்து துவங்குவது தான் சரியாக இருக்கும். கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளோம். இலவசமாக ஆக்சிஜன் தரும் மரங்களை நாம் ஏன் தவற விட வேண்டும். நன்றாக வளர்ப்போம்.அனைவரும் மரங்களை நட வேண்டும்தினேஸ்வரி, மாணவி, முதுகலை தாவரவியல்: மரங்கள் வெட்டப்பட்டு கட்டடங்கள் பெருகி வருகிறது. நாளுக்கு நாள் மாசும் அதிகரித்து வருகிறது. இப்போது நடும் மரங்கள் நம் எதிர்கால சந்ததிகளுக்கானவை. மாணவர்களிடம் இருந்து துவங்கிய இந்த பணி எல்லோருக்கும் வர வேண்டும். அனைவரும் மரங்களை நட வேண்டும். அதோடு நிறுத்தி கொள்ளாமல் தங்கள் பொறுப்பில் மரங்களை எடுத்து பராமரிக்க வேண்டும். நாம் செய்த மாசுக்கு பரிகாரம் மரம் நடுவது தான்.விழிப்புணர்வு செய்வேன்ஸ்ரீநிதி, சாணவி, முதுகலை தாவரவியல்: அனைவரும் ஒன்றாக செய்த இந்த கூட்டுமுயற்சி மனநிறைவை தந்துள்ளது. இனி கல்லுாரி நாட்களில் தினசரி நான் நட்டு வைத்த மரத்தை பராமரிப்பேன். எனக்கு தெரிந்தவர்களுக்கு மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறுவேன்இது போன்ற செயல்பாடுகளில் எங்களை கல்லுாரி நிர்வாகம் ஈடுபடுத்தியது உத்வேகம் அளிக்கிறது.மகிழ்ச்சியாக உள்ளதுவாசு, மாணவன், இளங்கலை தாவரவியல்: போதிய மரங்கள் இல்லாத கிராமங்களில் இருந்து தான் நாங்கள் இக்கல்லுாரிக்கு படிக்க வந்துள்ளோம். இங்குள்ள மரங்களை பார்க்கும் போது நம் ஊரிலும் இது போல நிறைய மரங்கள் நட வேண்டும் என ஆசை ஏற்படுகிறது. காட்டுக்குள் பார்த்த அரிய மரங்களை நேரில் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் அருநெல்லி செடியை நட்டுள்ளேன். நானே ஒரு மரத்தை நடும் போது தான் அதன் முக்கியத்துவத்தையும், எதிர்கால சந்ததிக்கு எத்தகைய தீர்வாக இருக்கும் என்பதையும் உணர முடிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X