தமிழ்நாடு

சரி பண்ணலாமே: பஜார் வீதிகளில் செயல்படாத கேமிராக்கள் தீபாவளி முன்பு அவசியமாகிறது சீரமைப்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்-விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு முக்கிய நகர்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், திருட்டு சம்பவங்களை தடுக்க பஜார் வீதியில் உள்ள கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் மக்கள் நடமாட்டம் பஜார் வீதியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பஸ்சில் இலவச பயணம்

ஸ்ரீவில்லிபுத்தூர்-விருதுநகர் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு முக்கிய நகர்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், திருட்டு சம்பவங்களை தடுக்க பஜார் வீதியில் உள்ள கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் மக்கள் நடமாட்டம் பஜார் வீதியில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பஸ்சில் இலவச பயணம் என்பதால் கிராமத்து பெண்கள் அதிக அளவில் நகரங்களுக்கு ஷாப்பிங் செய்ய வருகின்றனர்.இதனால் மாவட்டத்தில் ஒவ்வொரு நகரிலும் பஜார் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர் விடுமுறை நாட்கள் வருவதாலும், வார விடுமுறை நாட்களில் தீபாவளி பண்டிகைக்கான ஜவுளிகள் எடுப்பதற்கு மக்கள் உள்ளூர் , வெளியூர் கடைகளுக்கு அதிகளவில்செல்வர் . இவ்வாறு செல்வோரில் சிலர் தங்களின் பொருட்கள் மீதான சுய பாதுகாப்பை உணராமல் கவனக்குறைவுடன் செல்வதை பார்க்க முடிகிறது.

இதை பயன்படுத்தி திருடர்களின் கைவரிசை துவங்கி விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு வருகிறது. தற்போது கூட பஜார் வீதியில் போலீசார் கண்காணிப்பு இருந்தாலும் சிறு,சிறு திருட்டுக்கள் நடைபெறுகிறது.இதை தடுக்க பஜார் வீதிகளில் வைத்துள்ள கண்காணிப்பு கேமிராக்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை அந்தந்த பகுதி போலீசார் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமிராக்கள் முறையாக இயங்கும்படி கடை உரிமையாளர்களுக்கும் போலீசார் அறிவுறுத்த வேண்டும்.....சுய பாதுகாப்பு அவசியம்பஜார் வீதியில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் நிலையில் கண்காணிப்பு கேமிராக்கள் பழுதின்றி செயல்படுவதை போலீஸ் நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்களும் ரொக்கமாக பணத்தை கையில் எடுத்து செல்வதை தவிர்த்து ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். கொரோனா முற்றிலுமாக ஒழியாத நிலையில் முகக்கவசம் அணிந்து,நமது பாதுகாப்பு நமது கையில் என்பதை உணர்ந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும்.-ரவீந்திரன், சமூக ஆர்வலர், ஸ்ரீவில்லிபுத்துார்.............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X