1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

Added : அக் 10, 2021
Share
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், இன்று நடைபெற உள்ள சிறப்பு முகாமில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், 18 லட்சத்து 88 ஆயிரத்து 300 பேருக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 4 லட்சத்து 36 ஆயிரத்து 301 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.இன்று, நடைபெற உள்ள தடுப்பூசி முகாமில், குறைந்தபட்சம் ஒரு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், இன்று நடைபெற உள்ள சிறப்பு முகாமில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 18 லட்சத்து 88 ஆயிரத்து 300 பேருக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 4 லட்சத்து 36 ஆயிரத்து 301 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.இன்று, நடைபெற உள்ள தடுப்பூசி முகாமில், குறைந்தபட்சம் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தடுப்பூசி முகாம், அவரவர் வசிப்பிடம் அருகே அமைக்கப்பட்டு உள்ளதால், விடுபட்ட மக்கள் எளிதாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள, சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய் துறை உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.மக்கள் அனைவரும் பங்கேற்று, தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்திரமேரூர்உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று காலை, 7:00 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரை ஒன்பது இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள், 'ஆதார்' கார்டுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.முகாம் நடைபெறும் இடங்கள்பஜார் வீதி, பஸ் நிலையம், உத்திரமேரூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வாடாநல்லுார்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, குப்பையநல்லுார்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வேடபாளையம்அங்கன்வாடி மையம், வேடபாளையம் காலனிமுன்மாதிரி நடுநிலைப் பள்ளி, சின்னநாரசாம்பேட்டை தெருஅங்கன்வாடிமையம், காக்கநல்லுார்அங்கன்வாடி மையம், கல்லமா நகர்அங்கன்வாடி மையம், எம்.ஜி.ஆர்., நகர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X