பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பாலத்திற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : அக் 10, 2021
Share
Advertisement
மதுரை-சாத்துார் ரயில்வே பீடர் ரோடு மேம்பால திட்டத்திற்கு எதிராக தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சாத்துார் ரயில்வே பீடர் ரோடு வியாபாரிகள் நலச் சங்கம் செயலாளர் டேனியல்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:சாத்துார் ரயில்வே பீடர் (சாத்துார்-இருக்கன்குடி) ரோட்டில் ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. மேம்பாலம் அமைக்க நிலம்

மதுரை-சாத்துார் ரயில்வே பீடர் ரோடு மேம்பால திட்டத்திற்கு எதிராக தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சாத்துார் ரயில்வே பீடர் ரோடு வியாபாரிகள் நலச் சங்கம் செயலாளர் டேனியல்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:சாத்துார் ரயில்வே பீடர் (சாத்துார்-இருக்கன்குடி) ரோட்டில் ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்த பிப்.,12 ல் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இங்கு 99 சதவீதம் சிறு வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர். பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. நிலம் கையகப்படுத்தினால், எஞ்சிய மிகக்குறுகிய இடத்தில் கடைகள் நடத்த இயலாது. எங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வைப்பாறு வடக்குகரை மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு மனு அனுப்பினோம்.ரயில்வே பீடர் ரோடு பிரதான ரோடு அல்ல. பல கிராமங்களை இணைக்கும் ரோடுதான். மேம்பாலத்தால் சாத்துார் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தரைப்பாலம் அமைக்கலாம்.ரூ.11.20 கோடி மேம்பால திட்டப்பணி அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். மாற்றுவழியில் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு டேனியல்ராஜ் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர், விருதுநகர் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,22 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X