பொது செய்தி

தமிழ்நாடு

நாணயங்கள் டூ பழம்பொருட்கள் சேகரிக்கும் சிவகாசி இளம்பெண்

Added : அக் 10, 2021
Share
Advertisement
சிவகாசிபழங்காலத்தில் பண்டமாற்று முறை முடிவுக்கு பின் சரியான மாற்று பொருளாக நாணயங்கள் இருந்துள்ளன. நாணயங்களை தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு என அந்தந்த ஆட்சியாளரின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தினர். காலப்போக்கில் மெருகேற்றி அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்தார்கள்.அக்காலத்தில் ஒரு நாணயத்தின் மதிப்பு என்பது ஒரு காசை கொடுத்து 10 யானைகள்,

சிவகாசிபழங்காலத்தில் பண்டமாற்று முறை முடிவுக்கு பின் சரியான மாற்று பொருளாக நாணயங்கள் இருந்துள்ளன. நாணயங்களை தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு என அந்தந்த ஆட்சியாளரின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தினர். காலப்போக்கில் மெருகேற்றி அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்தார்கள்.அக்காலத்தில் ஒரு நாணயத்தின் மதிப்பு என்பது ஒரு காசை கொடுத்து 10 யானைகள், 100 குதிரைகள், ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கலாம்.நாணயத்தின் மதிப்பு அந்தளவிற்கு உயர்ந்திருந்தது. அத்தகைய சிறப்பு பெற்ற பண்டைய காலத்து நாணயங்களை சிவகாசி காயாம்பு நகரில் வசிக்கும் பிளஸ்சி சேகரித்து வைத்திருக்கிறார். கி.மு. 600ல் இந்தியாவில் அச்சடித்த முதல் நாணயத்திலிருந்து இன்றைய நாணயங்கள், அசோகர், கனிஷ்கர், குஷாணர்கள், சங்ககால சேர,சோழ, பாண்டியர்கள், கி.பி., 1526ல் இருந்து 1858 வரை 333 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள், ஜஹாங்கீர், ஷாஜகான், ராஜராஜசோழன், கிருஷ்ணதேவராயர், முகம்மது ஷா போன்றோரின் தங்க நாணயங்களையும் சேகரித்துள்ளார். ஒரு நாட்டின் நாணயத்தை வைத்து அந்நாட்டின் பொருளாதாரம், ஆட்சி அதிகாரம் அனைத்தும் அறியலாம்.பிளஸ்சி கூறியதாவது: பண்டமாற்று முறையை பல காலங்களில் வியாபாரமாக கருதி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளார்கள். கி.மு. 600 ல் சந்திரகுப்த மவுரியர் அரசு முத்திரையுடன் முதன்முதலாக வெள்ளி நாணயம் அச்சிட்டார். அந்த நாணயம் முதல் இக்கால நாணயங்கள் வரை சேகரித்து வைத்துள்ளேன்.அதுமட்டுமல்லாது தமிழர்களின் வரலாறு, பண்பாடு, நாகரிகம், கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பண்டைய கால பழம்பொருட்களும்சேகரித்துள்ளேன். இவற்றின் அருமையை உணரும் வகையில் பள்ளி, கல்லுாரிகளிலும் காட்சிப்படுத்தி உள்ளேன்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X