தேர்தல் துளிகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் துளிகள் 

Added : அக் 10, 2021
Share
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் ஏகனாபுரம் ஊராட்சியில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு, நேற்று காலை சிற்றுண்டி வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு மாத்திரை சாப்பிடும் ஊழியர்கள் அவதியடைந்தனர்l ராமானுஜபுரம், சிவன்கூடல்ஓட்டுச்சாவடியில் மதிய உணவு வர தாமதமானதால், தேர்தல் ஊழியர்கள்,

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் ஏகனாபுரம் ஊராட்சியில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு, நேற்று காலை சிற்றுண்டி வழங்க காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு மாத்திரை சாப்பிடும் ஊழியர்கள் அவதியடைந்தனர்l ராமானுஜபுரம், சிவன்கூடல்ஓட்டுச்சாவடியில் மதிய உணவு வர தாமதமானதால், தேர்தல் ஊழியர்கள், போலீசார் பசியால் தவித்தனர்l ஏகனாபுரம் ஊராட்சியில் தேர்தல் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், கையுறை அணிய தெரியாத வாக்காளர்களுக்கு இன்முகத்துடன் கையுறை அணிவித்தார்l கண்ணந்தாங்கல், காந்துார், ராமானுஜபுரம், சந்தவேலுார், மொளச்சூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், முதலில் வந்து ஓட்டளித்த, 100 பேருக்கு மட்டுமே முக கவசம் வழங்கப்பட்டது.

அதன்பின் வந்தவர்களுக்கு முக கவசம் வழங்கப்படவில்லைl மதுரமங்கலம் ஊராட்சியில் ஓட்டளிக்க வந்தோர், கையுறை அணிந்தால் கையெழுத்து போட சிரமமாக இருப்பதாக கூறி, கையுறை அணியாமலே சென்று ஓட்டளித்தனர்l கண்ணந்தாங்கல் ஊராட்சிக்கு 'தெர்மல் ஸ்கேனர்' அனுப்பப்படவில்லை. இதனால் காலை 10.15 மணி வரை ஓட்டளித்த வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவியால் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவில்லை. அதேபோல் ராமானுஜபுரம் ஓட்டுச்சாவடியில், தெர்மல் ஸ்கேனர் கருவி பழுதடைந்து இருந்ததுl மதுரமங்கலம் ஊராட்சியில் சங்கீதா என்ற பெண் வாக்காளர், பிறந்து 10 நாட்களே ஆன, தன் பச்சிளங்குழந்தையுடன் வந்து ஓட்டளித்தார்l

சுங்குவார்சத்திரத்தில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் நேற்று, டிபன், சாப்பாடு உள்ளிட்டவை பார்சல் மட்டுமே வழங்கப்பட்டனl சந்தவேலுார் ஊராட்சி ஓட்டுச்சாவடியில், நுாற்றுக்கணக்கான நரிக்குறவர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர்l மதுராந்தகம் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டு, 9வது வார்டு, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, அ.தி.மு.க.,வில் சார்பில் போட்டயிட்ட வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு மதிய நேர உணவாக பிரியாணி வழங்கினர்l காட்டாங்கொளத்துார் ஒன்றியம் சிங்கபெருமாள்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியை, கலெக்டர் ராகுல்நாத் நேற்று ஆய்வு செய்தார். l ஆப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி ஓட்டளித்தார்.ஓட்டுச்சாவடி அருகே விதிமீறல்l சோகண்டி ஓட்டுச்சாவடி முன் அதிகளவு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு கூடியிருந்த கும்பலை போலீசார் விரட்டினர். மீண்டும் கூடாமல் இருக்க, அதிக போலீசார் குவிக்கப்பட்டனர்l மொளச்சூர் ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வழியில், கட்சி பாகுபாடின்றி பல்வேறு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.l மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிதண்டிமண்டபம், பிலாப்பூர், மெய்யூர், கருணாகரச்சேரி உள்ளிட்ட சில ஊராட்சிகள், உத்திரமேரூர் ஊராட்சிகளை ஒட்டியுள்ளன. உத்திரமேரூரில் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததால், அங்கிருந்த கட்சியினர் மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் குவிந்தனர். போலீசார் அவர்களை விரட்டினர்l

இந்த ஓட்டுச்சாவடி வளாகத்தில், ஓட்டுச்சாவடி முகவர்களை தவிர, பிற அரசியல் கட்சியினர் யாரையும், போலீசார் அனுமதிக்கவில்லைl எழிச்சூர், ஒரகடம், வைப்பூர், செரப்பனஞ்சேரி ஆகிய ஊராட்சி ஓட்டுச்சாவடிகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்ட ஓட்டுப்பதிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீசாரைவிட, இம்முறை கூடுதலாக நியமிக்கப்பட்டிருந்தனர் l வைப்பூர் ஊராட்சி கூழாங்கல்சேரி, வைப்பூர், செரப்பனஞ்சேரி ஆகிய ஓட்டுச்சாடிகளில், 100 மீட்டருக்கு வெளியே, ஓட்டளித்து விட்டு வந்த வாக்காளர்களுக்கு, கட்சியினர் தண்ணீர் பாட்டில் வினியோகித்தனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X