பொது செய்தி

தமிழ்நாடு

நுாறு நாள் வேலைத்திட்டத்தால் ஐம்பது சதவீத விவசாயம் பாதிப்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம்-- -விவசாயக் கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்றுவிடுவதால் 50 சதவீதம் வேளாண் தொழில் பாதித்துள்ளதாக நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.ஒட்டன்சத்திரம் தாலுகாவில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. எனவே, இப்பகுதியில் நாற்றுப் பண்ணைகள் அதிகம் உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் தக்காளி, மிளகாய், கத்தரி நாற்றுக்களை விவசாயிகள் வாங்கி

ஒட்டன்சத்திரம்-- -விவசாயக் கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்றுவிடுவதால் 50 சதவீதம் வேளாண் தொழில் பாதித்துள்ளதாக நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.ஒட்டன்சத்திரம் தாலுகாவில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. எனவே, இப்பகுதியில் நாற்றுப் பண்ணைகள் அதிகம் உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்தும் தக்காளி, மிளகாய், கத்தரி நாற்றுக்களை விவசாயிகள் வாங்கி செல்கின்றனர்.100 நாள் வேலை திட்டத்திற்கு கூலி தொழிலாளர்கள் சென்றுவிடுவதால் விவசாய பணிகளை செய்வதற்கு தேவையான கூலித் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனால் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு கூலி அதிகம் கொடுக்க வேண்டி உள்ளது.எனவே, விளைந்த காய்கறிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைத்தால்தான் சமாளிக்க முடியும். ஆனால் காய்கறிகள் விலை நிரந்தரம் இல்லாமல் இருப்பதால் விளைச்சல் நன்றாக இருந்தும் நஷ்டமடைய வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர்.நாற்றுப் பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், " நூறு நாள் வேலைத் திட்டத்தால் 50 சதவீத விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நாற்றுக்கள் விற்பனை மிகவும் குறைந்துவிட்டது" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X