தமிழ்நாடு

அமைதியாக நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல்: 66 சதவீத ஓட்டுப்பதிவு

Added : அக் 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல்--திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி மன்றங்களில் 13 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று எவ்வித சலசலப்பும் இன்றி 66 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது.திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், வில்பட்டி, சத்திரப்பட்டி, ஆண்டிபட்டி, ஆவிளிபட்டி ஆகிய 4 ஊராட்சி தலைவர்கள், நிக்கோட்டை மற்றும் பழனி ஒன்றியத்தில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 28 பதவிகள் காலியாக
 அமைதியாக நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல்: 66 சதவீத ஓட்டுப்பதிவு

திண்டுக்கல்--திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சி மன்றங்களில் 13 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று எவ்வித சலசலப்பும் இன்றி 66 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், வில்பட்டி, சத்திரப்பட்டி, ஆண்டிபட்டி, ஆவிளிபட்டி ஆகிய 4 ஊராட்சி தலைவர்கள், நிக்கோட்டை மற்றும் பழனி ஒன்றியத்தில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 28 பதவிகள் காலியாக இருந்தன.ஆண்டிப்பட்டி, ஆவிளி பட்டி ஆகிய ஊராட்சி தலைவர்கள் மற்றும் 13 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியில்லாததால், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

எனவே, 2 ஒன்றிய கவுன்சிலர்கள், வில்பட்டி, சத்திரபட்டி ஊராட்சி தலைவர்கள், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 13 பதவிகளுக்கு தேர்தல் நேற்று நடந்தது. மொத்தம் 45 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.இப்பகுதிகளில் 57 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலைமுதல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. உடல்வெப்ப நிலையை பரிசோதித்தபின், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து ஓட்டளித்தனர்.

முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றமான 14 ஓட்டுச்சாவடிகளில் துப்பாக்கி போலீசார் நிறுத்தப்பட்டனர். திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி, எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.மாலை 5:00 மணி நிலவரப்படி 64 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இரவு 7:00 மணி வரை 65.63 சதவீத ஓட்டுப்பதிவானது. ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X