பொது செய்தி

தமிழ்நாடு

சத்திரப்பட்டியில் 71 சதவீதம் பதிவு

Added : அக் 10, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் --சத்திரப்பட்டி, வில்பட்டி ஊராட்சிகளில் முறையே 71 மற்றும் 56 சதவீத ஓட்டுகள் பதிவாகின.ஒட்டன்சத்திரம் ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சித் தலைவர் தேர்தலில் இரண்டு பேர் போட்டியில் உள்ளனர். இங்குள்ள 4,050 வாக்காளர்களில், 2,866 பேர் ஓட்டளித்துள்ளனர். இது 71 சதவீதமாகும். அம்பிளிக்கை ஊராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் தேர்தலில் 90 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மொத்த

ஒட்டன்சத்திரம் --சத்திரப்பட்டி, வில்பட்டி ஊராட்சிகளில் முறையே 71 மற்றும் 56 சதவீத ஓட்டுகள் பதிவாகின.ஒட்டன்சத்திரம் ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சித் தலைவர் தேர்தலில் இரண்டு பேர் போட்டியில் உள்ளனர். இங்குள்ள 4,050 வாக்காளர்களில், 2,866 பேர் ஓட்டளித்துள்ளனர். இது 71 சதவீதமாகும். அம்பிளிக்கை ஊராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர் தேர்தலில் 90 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மொத்த ஓட்டுகள் 218ல் 196 பேர் ஓட்டு பதிவு செய்தனர்.வில்பட்டியில் 56 சதவீதம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் 12 ஆயிரத்து 260 ஓட்டுகள் உள்ளன. வார்டு வரையறையில் ஏற்பட்ட குழப்பத்தால் வாக்காளர்கள் குழப்பமடைந்தனர். எனவே காலை முதலே 22 ஓட்டுச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருந்தது. வாக்காளர்கள் பலருடைய ஓட்டுகள், தொலைதூர பகுதி ஓட்டுச்சாவடியில் இருந்ததால் பலர் ஓட்டளிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் 56 சதவீத வாக்குகளே பதிவாகின. தேர்தல் பிரச்னையின்றி அமைதியாக நடந்தது. பதிவான ஓட்டுப்பெட்டிகள் கொடைக்கானல் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டன.பழநிஒன்றியத்தில் 11 வது வார்டுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேர் போட்டியிட்டனர். எட்டு ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இரவில் போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப்பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X