பொது செய்தி

தமிழ்நாடு

2ம் கட்ட தேர்தலில் கிராமங்களில்...போலீசார் - கட்சியினர் தள்ளுமுள்ளு ரகளை!

Added : அக் 10, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், பல கிராமங்களில் கட்சியினர் ரகளை ஈடுபட்டனர். போலீசார், கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப்பதிவு, கடந்த 6ம் தேதி நடந்தது.அன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், திருப்போரூர்,
 2ம் கட்ட தேர்தலில் கிராமங்களில்...போலீசார் -  கட்சியினர் தள்ளுமுள்ளு  ரகளை!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், பல கிராமங்களில் கட்சியினர் ரகளை ஈடுபட்டனர்.

போலீசார், கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப்பதிவு, கடந்த 6ம் தேதி நடந்தது.அன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லத்துார்,

புனிததோமையார் மலை ஒன்றியங்களில், பயங்கர சொதப்பலாக தேர்தல் நடந்தது.நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார்; செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்துார், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் மற்றும் சித்தாமூர் ஒன்றியங்களில் நடந்தது.காஞ்சிபுரத்தின் இரண்டு ஒன்றியங்களிலும், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என, 880 பதவிகளுக்கு, 2,975 பேர் போட்டியிட்டனர்.அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தின் நான்கு ஒன்றியங்களில் 1,736 பதவிகளுக்கு 5,578 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இரு மாவட்டங்களிலும், பல இடங்களில் நேற்று கூச்சல் குழப்பமாகவும், சலசலப்பாகவும் தேர்தல் நடந்தது.அமைதியான முறையில் தேர்தல் நடத்த மாவட்ட நிர்வாகமும், போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்திருந்தனர். ஆனாலும் உள்ளாட்சி தேர்தல் என்பதால், கிராமங்களில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பலர் சண்டையிட்டபடியே இருந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் சந்தவேலுார், அய்யப்பந்தாங்கல், எழிச்சூர் போன்ற பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் சம்பந்தமாக கைகலப்பு, போலீசார் தடியடி போன்ற பல்வேறு பிரச்னைகள் எழுந்தன.

போலீசார் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டு, கிராமத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் சலசலப்பு ஏற்பட்டது. வாக்காளர்களுக்கு, வேட்பாளர்கள் சிலர் பிரியாணி வினியோகம் செய்தது உட்பட பல தேர்தல் விதிமீறல்கள் நடந்தன.காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி., சத்யபிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் ஓட்டுச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று, தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர். பிரச்னைக்குரிய இடங்களில் போலீசாரை கூடுதலாக அனுப்பி, பிரச்னையை குறைக்க நடவடிக்கை எடுத்தனர்.

காலையில் விறுவிறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவு, மதியம் வெயில் காரணமாக ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல் ஓட்டுச்சாவடிக்கு வந்து, 'டோக்கன்' பெற்று, ஆயிரக்கணக்கானோர் ஓட்டளித்தனர்.நுாற்றுக்கணக்கானோர் மாலை 7:00 மணி வரை ஓட்டளித்ததால், ஓட்டுப்பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது.ஓட்டு எண்ணும் மையங்களுக்கு, மண்டல அலுவலர்கள் மூலம் வாகனங்களில், ஓட்டுச்சாவடியிலிருந்து அனைத்து ஓட்டுப்பெட்டிகளும் அனுப்பப்பட்டன.ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள அதிகாரிகள், ஓட்டுப்பெட்டிகளை பெற்று, அவற்றை 'ஸ்ட்ராங்க் ரூம்' எனப்படும், பாதுகாப்பு அறையில் வரிசை எண் படி வைத்தனர்.'சேலஞ்ச்' ஓட்டுஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் கண்ணந்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 39, என்பவர், '86 ஏவி' என்ற எண் உடைய ஓட்டுச்சாவடிக்கு நேற்று காலை சென்றார்.

வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணும், வாக்காளர் பட்டியலில் உள்ள எண்ணும் வெவ்வேறாக இருந்தது. மேலும் அவரது பெயர் இரட்டை பதிவாக இருந்ததால், அவரை ஓட்டுப்போட அனுமதிக்க மாட்டோம் என, ஓட்டுச்சாவடி முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து அவருக்கு, 'சேலஞ்ச்' ஓட்டளிக்க முடிவு செய்யப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி 'சேலஞ்ச்' ஓட்டளித்து, ஓட்டு சீட்டுகளை ஓட்டுபெட்டியில் போடாமல், அந்த ஓட்டுச்சாவடியின் தேர்தல் அலுவலரிடம் வழங்கினார்.எம்.எல்.ஏ., சிறைபிடிப்புஅச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஒரத்தி ஓட்டுச்சாவடிக்கு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம் சென்றார்.அங்கிருந்த தி.மு.க., பூத்து முகவர்கள், 'ஓட்டுசாவடி வளாகத்திற்குள் உங்களை அனுமதித்தது யார்' என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டுசாவடிக்கான கேட்டை இழுத்து தாழ்ப்பாள் போட்டனர்.

போலீசார் வந்து அவரை மீட்டனர்.சின்னம் இல்லாததால் மீண்டும் ஓட்டுப்பதிவுகுன்றத்துார் ஒன்றியம் பூந்தண்டலம் ஊராட்சி புதுச்சேரி கிராம அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையத்தில், மொத்தமுள்ள 603 ஓட்டுகளில் 72 பேர் ஓட்டளித்தனர்.அப்போது ஓட்டு செலுத்த வந்த வேட்பாளர் ஒருவர் ஓட்டுச்சீட்டை பார்த்தபோது, அதில் பா.ம.க.,வின் மாம்பழம் சின்னம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்ற ஓட்டுப்பதிவு சீட்டை பார்த்தபோது, காஞ்சிபுரம் ஒன்றியத்தில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுச்சீட்டுகள், தவறாக இங்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி ஓட்டுச்சாவடி மையத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஊராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வழக்கம்போல் நடத்தப்பட்டது.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை என்பதால் ஞாயிறு அல்லது திங்கட்கிழமை, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் தனியாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இரு மாவட்டத்திலும் விழுந்ததுஎத்தனை சதவீத ஓட்டுகள்காஞ்சிபுரம் மாவட்டத்தில், 72 சதவீதம்; செங்கல்பட்டு மாவட்டத்தில் 70 சதவீத ஓட்டுகளும் நேற்று பதிவாகியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்ட தேர்தலில் 84.3 சதவீத ஓட்டுகள்; செங்கல்பட்டு மாவட்டத்தில் 67 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.இரு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் 12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

அன்று மாலை, தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.இம்முறையும் ஏன் சொதப்பல்?முதற்கட்ட தேர்தலில் உள்ளாவூர் ஊராட்சியில் நடந்த தேர்தலில், வேட்பாளர் பெயர் தவறாக இடம் பெற்றிருந்தது. அதேபோல் சிங்காடிவாக்கம் ஊராட்சியில் கள்ள ஓட்டு போடப்பட்டது. கடந்த முறை சொதப்பியதுபோல் இல்லாமல், நல்ல முறையில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் சின்னம் இல்லாதது, வார்டு மாற்றப்பட்டது உள்ளிட்ட பிரச்னைகளால், இரண்டாம் கட்ட தேர்தலிலும், பல சொதப்பலாகவே நடந்துள்ளது.
-- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X