பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களால் பள்ளிக்கு கிடைத்த பரிசு

Added : அக் 10, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு---கோம்பைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறமையால் பள்ளிக்கு ரூ 1.5 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் போர்டு கிடைத்துள்ளது.கோம்பைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒன்றிய அளவிலான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இடைநிலை பிரிவு சார்பில் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்து இந்த போட்டி நடந்தது. இதனால்

வத்தலக்குண்டு---கோம்பைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறமையால் பள்ளிக்கு ரூ 1.5 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் போர்டு கிடைத்துள்ளது.

கோம்பைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒன்றிய அளவிலான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இடைநிலை பிரிவு சார்பில் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் குறித்து இந்த போட்டி நடந்தது. இதனால் இப்பள்ளிக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் போர்டு மற்றும் ஒரு ஆண்டுக்கான ரூ.10 ஆயிரம் மதிப்பில் இன்டர்நெட் வசதியும் பரிசாக கிடைத்தது.தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் கூறியதாவது: இந்த வசதி தனியார் பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்புகள் போன்று சர்வர் வசதியுடன் இயங்குவது அல்ல. இன்டர்நெட் வசதியுடன் தனித்து இயங்க கூடியது. ஒவ்வொரு ஆசிரியரும் அவரவர் பாடங்களை அவர்களே 'டவுன்லோட்' செய்து இதில் சேமித்து வைத்து கற்பிக்கின்றனர். இந்த டிஜிட்டல் பலகையில் கையால் எழுதி அழிக்க முடியும் என்பதால் பயன்படுத்துவது எளிது. இதனால் மாணவர்களின் புரிதல் தன்மை அதிகரித்துள்ளது. மாணவர்களின் வகுப்பறை ஆர்வமும் அதிகரித்துள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X