குடியிருப்புக்குள் கழிவுநீர்

Added : அக் 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-- -திண்டுக்கல் அருகே கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் மதுரை ரோடு பகுதி, முகமதியாபுரம், யூசுப் நகர், பிஸ்மி நகர், ஏபி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு முறையான வழித்தடம் இல்லை.எனவே, இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலை

திண்டுக்கல்-- -திண்டுக்கல் அருகே கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் மதுரை ரோடு பகுதி, முகமதியாபுரம், யூசுப் நகர், பிஸ்மி நகர், ஏபி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு முறையான வழித்தடம் இல்லை.எனவே, இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலை கருப்பணசாமி கோயில் தெரு வழியாக செல்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரமற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிவு நீர் புகுந்து விடுகிறது.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளப்பட்டி பஞ்சாயத்து, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று திண்டுக்கல் -- வத்தலகுண்டு சாலையில் குடைபாறைபட்டியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்பு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X