சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி மலைக்கோயிலில் இசை கலைஞர்கள் தவில், நாதஸ்வரம் வாசித்து போராட்டம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
பழநி--பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இசை கலைஞர்கள் தவில், நாதஸ்வரம் வாசித்து போராட்டம் நடத்தினர்.பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உப கோயிலான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜபெருமாள் கோயில், பெரிய ஆவுடையார் கோயில் உள்ளிட்ட ஏழு கோயில்கள் உள்ளன.அவற்றில் நித்திய

பழநி--பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இசை கலைஞர்கள் தவில், நாதஸ்வரம் வாசித்து போராட்டம் நடத்தினர்.பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உப கோயிலான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜபெருமாள் கோயில், பெரிய ஆவுடையார் கோயில் உள்ளிட்ட ஏழு கோயில்கள் உள்ளன.அவற்றில் நித்திய பூஜைக்காக நாதஸ்வரம், தவில், ஒத்து ஆகிய இசைக்கருவிகளை வாசிக்க தற்காலிக இசைக்கலைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ரூ. 200 ஊதியத்தில் தினக்கூலி அடிப்படையில் 19 பேர் பணியில் உள்ளனர். அவர்களை பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகம் கூறியதால், இசைக்கருவிகளுடன் கோயில் அலுவலகம் முன்பு தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X