சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வளைவை மாற்ற வேண்டும்; வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

Added : அக் 10, 2021
Share
Advertisement
பொதட்டூர்பேட்டை : ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மார்க்கத்தில் நாதன்குளக்கரையை ஒட்டிய சாலை திருப்பத்தில், எதிரே வரும் வாகனங்களை கவனிக்க முடியாமலும், சாலை திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.சமீபத்தில் அரசு பஸ் ஒன்று இந்த பகுதியில் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று,
 வளைவை மாற்ற வேண்டும்; வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

பொதட்டூர்பேட்டை : ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மார்க்கத்தில் நாதன்குளக்கரையை ஒட்டிய சாலை திருப்பத்தில், எதிரே வரும் வாகனங்களை கவனிக்க முடியாமலும், சாலை திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

சமீபத்தில் அரசு பஸ் ஒன்று இந்த பகுதியில் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று, இருசக்கர வாகனத்தில் வந்தவர், சாலை திருப்பத்தில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல், சாலையோர கல் தடுப்பு மீது மோதி, பலத்த காயம் அடைந்தார்.சுய நினைவு இன்றி இருந்தவரை, அவ்வழியாக சென்றனர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் சிக்கிய நபர் யார் என்பது குறித்து, பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். அடிக்கடி விபத்து நடக்கும் இந்த பகுதியில் சாலை வளைவை நேராக மாற்றி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X