சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை ஆர்.டி.ஓ., ஆலோசனை 

Added : அக் 10, 2021
Share
Advertisement
திருத்தணி : வடகிழக்கு பருவ மழை துவங்குவதை முன்னிட்டு, வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், திருத்தணியில், நேற்று நடந்தது.இதில் கோட்டாட்சியர் சத்யா பேசியதாவது:இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து துறை அதிகாரிகள் பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க

திருத்தணி : வடகிழக்கு பருவ மழை துவங்குவதை முன்னிட்டு, வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், திருத்தணியில், நேற்று நடந்தது.

இதில் கோட்டாட்சியர் சத்யா பேசியதாவது:இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து துறை அதிகாரிகள் பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.அதாவது, நீர்வரத்து கால்வாய், ஏரியின் மதகு மற்றும் நீர் வரவு கால்வாய் சீரமைக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக விழும் மரங்களை அறுப்பதற்கு வாள் இயந்திரம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தால் அகற்றுவதற்கு உள்ளாட்சி துறையினர் தயாராக இருக்க வேண்டும். பொதுவாக அனைத்து துறை அதிகாரிகள், பருவ மழையால் ஏற்படும் பேரிடர் இடர்பாடுகளை சமாளிக்க, ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X