சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை வாங்கி தருவதாக மோசடி அரசு பள்ளி ஆசிரியை இருவர் கைது

Added : அக் 10, 2021
Share
Advertisement
புதுவண்ணாரப்பேட்டை : அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் ஆசிரியர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.புழல், மதுரா மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அனிதா கார்மெல், 43.இவருக்கு, செம்பியம், திரு.வி.க., நகரைச் சேர்ந்த திருப்பாச்சூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மேகலா, 59, பாடி, புது நகரைச் சேர்ந்த விநாயகபுரம் பள்ளி விளையாட்டு ஆசிரியை சத்யபிரியா, 39, ஆகியோர்

புதுவண்ணாரப்பேட்டை : அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் ஆசிரியர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

புழல், மதுரா மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அனிதா கார்மெல், 43.இவருக்கு, செம்பியம், திரு.வி.க., நகரைச் சேர்ந்த திருப்பாச்சூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை மேகலா, 59, பாடி, புது நகரைச் சேர்ந்த விநாயகபுரம் பள்ளி விளையாட்டு ஆசிரியை சத்யபிரியா, 39, ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.

இவர்கள் இருவரும், அனிதாவிற்கு தமிழ் வளர்ச்சி துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, 2017ல், 5 லட்சம் ரூபாய் பெற்றனர். ஆனால், வேலை வாங்கி தரவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை.இது குறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசில், 2017ல் அனிதா புகார் கொடுத்தார். அப்போது, குறித்த கால தவணையில், பணத்தை திருப்பி தருவதாக ஆசிரியைகள் தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வந்தனர்.இந்நிலையில், ஜூலை, 26ம் தேதி, கமிஷனர் அலுவலகத்தில் அனிதா புகார் அளித்தார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர். இதில், மேகலா ஏற்கனவே பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X