சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு... மகிழ்வித்து மகிழும் பாலசுப்பிரமணியன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு... மகிழ்வித்து மகிழும் பாலசுப்பிரமணியன்

Added : அக் 10, 2021
Share
தெருவோர வியாபாரிகள் மற்றும் மக்களின் புகைப்படங்களை, அவர்களே எதிர்பாராதபடி அழகாக 'பிரின்ட்' போட்டு, மீண்டும் தேடித்தேடி போய் கொடுப்பவர் தான் பாலசுப்பிரமணியன்!சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் தெருக்கள், 'நவராத்திரி' விசேஷத்தை முன்னிட்டு, கொலு பொம்மை விற்போர், பூ விற்போர், பழம் விற்போர் என, எளிய மனிதர்களால் களைகட்டும்.அவர்களை வண்டுகளை போன்று அன்றாடம்


தெருவோர வியாபாரிகள் மற்றும் மக்களின் புகைப்படங்களை, அவர்களே எதிர்பாராதபடி அழகாக 'பிரின்ட்' போட்டு, மீண்டும் தேடித்தேடி போய் கொடுப்பவர் தான் பாலசுப்பிரமணியன்!

சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் தெருக்கள், 'நவராத்திரி' விசேஷத்தை முன்னிட்டு, கொலு பொம்மை விற்போர், பூ விற்போர், பழம் விற்போர் என, எளிய மனிதர்களால் களைகட்டும்.அவர்களை வண்டுகளை போன்று அன்றாடம் புகைப்பட கலைஞர்கள் மொய்ப்பர். தங்கள் சந்தோஷத்திற்காக படங்கள் எடுத்து குவிப்பர்.

வியாபாரத்திற்கு இடையே புகைப்பட கலைஞர்களை பார்த்து, ஓர புன்னகை பூத்தபடி, தங்கள் அன்றாட பணியில் வியாபாரிகள் ஈடுபடுவர்.அன்றாட வாழ்க்கைக்காக வெயில், மழை பாராது உழைக்கும் இவர்களை மகிழ்வித்து மகிழ வேண்டும் என எண்ணினார், 'போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ்' அமைப்பின் முன்னாள் தலைவரான பாலசுப்பிரமணியன்.தான் யாரை எல்லாம் படம் எடுத்தாரோ... அவர்களது படத்தை கம்ப்யூட்டர் மூலம் மேலும் அழகு சேர்த்து, தன் சொந்த செலவில் 'பிரின்ட்' செய்து, அவர்களை மீண்டும் தேடிப்போய் கொடுத்து விடுவார்.படங்களை பெற்றதும்,

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த மக்களுக்கு, அப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. கைகூப்பி நன்றி தெரிவிக்கின்றனர். 'ஏதாவது பணம் கொடுக்கணுமாய்யா...' என வெள்ளந்தியாக கேட்கின்றனர்.'அதெல்லாம் வேண்டாம்...' என்றதும், கண்களால் மீண்டும் நன்றி தெரிவிக்கின்றனர். ஒரு சில நவராத்திரி பொம்மை விற்கும் கடைகளில், விற்பவர், உதவியாளர் என இருவர் இருப்பர். அவர்கள் இருவரையும் திருப்திப்படுத்தும் விதத்தில், இரண்டு 'பிரின்ட்'கள் போட்டுக் கொடுக்கிறார்.எவ்வளவு பணம் கொடுத்தாலும், ஈடு செய்யாத சந்தோஷத்தை, இந்த படம் கொடுக்கும் 'அவர்களுக்கும் சரி... எனக்கும் சரி!' என நம் நெஞ்சம் தொடுகிறார் பாலசுப்பிரமணியன்!
- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X