சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாமூல் கேட்டு மிரட்டல் ரவுடிகள் இருவர் சிக்கினர்

Added : அக் 10, 2021
Share
Advertisement
கோயம்பேடு : மளிகைக் கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் இருவரை, போலீசார் சுற்றிவளைத்தனர்.கோயம்பேடு, நியூ காலனி, 10வது தெருவில் மளிகைக்கடை வைத்துள்ளவர் லிங்கேஸ்வரி, 50. நேற்று அவரது கடையில் பொருட்கள் வாங்கிய இருவர், பணம் தராமல் கத்தியை காட்டி மிரட்டி சென்றனர்.மீண்டும், இரவு கடைக்கு வந்து மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர் கடையை பூட்டி

கோயம்பேடு : மளிகைக் கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் இருவரை, போலீசார் சுற்றிவளைத்தனர்.

கோயம்பேடு, நியூ காலனி, 10வது தெருவில் மளிகைக்கடை வைத்துள்ளவர் லிங்கேஸ்வரி, 50. நேற்று அவரது கடையில் பொருட்கள் வாங்கிய இருவர், பணம் தராமல் கத்தியை காட்டி மிரட்டி சென்றனர்.மீண்டும், இரவு கடைக்கு வந்து மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, அவர் கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார்.ஆனால், அந்த இரு வாலிபர்கள் அவரது வீட்டிற்கு சென்று, 'வெளியே வா; இல்லையென்றால் கதவை உடைத்து உள்ளே வருவோம்' என, மிரட்டினர்.கோயம்பேடு போலீசார், இருவரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில், கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த ஜெயகுமார், 26, மற்றும் அரியலுாரைச் சேர்ந்த பொன் ராமகிருஷ்ணன், 23, என தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், இரண்டு பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர். ஜெயகுமார் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என, 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதே போல், பொன் ராமகிருஷ்ணன் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X