பொது செய்தி

தமிழ்நாடு

கட்டணம் செலுத்தியும் தனிமனை வரன்முறை உத்தரவு இழுத்தடிப்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
மதுரை-மதுரை மாநகராட்சியின் அங்கீகாரமற்ற தனி மனைகள் வரன்முறை திட்டத்திற்கு உரிய கட்டணம் செலுத்தியும், இரண்டு மாதங்களாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கும் உத்தரவை உடனே வழங்க கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தலைவர் சுந்தரபாண்டியன், செயலாளர் ஜம்புலிங்கம், பொருளாளர் சக்திகுமார் கூறியதாவது: தனி மனை வரன்முறைக்காக

மதுரை-மதுரை மாநகராட்சியின் அங்கீகாரமற்ற தனி மனைகள் வரன்முறை திட்டத்திற்கு உரிய கட்டணம் செலுத்தியும், இரண்டு மாதங்களாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கும் உத்தரவை உடனே வழங்க கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தலைவர் சுந்தரபாண்டியன், செயலாளர் ஜம்புலிங்கம், பொருளாளர் சக்திகுமார் கூறியதாவது: தனி மனை வரன்முறைக்காக மாநகராட்சியில் மக்கள் கட்டணம் செலுத்தியும், நகர் ஊரமைப்பு துணை இயக்குனரிடம் பரிந்துரை கடிதம் பெற்றும் அலைக்கழிக்கப்படுகின்றனர். வரன்முறை திட்டப்படி முன்புற சாலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிற்கு ஒப்படைத்ததாகவே கருதப்படும், பட்டா முந்தைய உரிமையாளர் பெயரில் இருந்தால் போதும் எனவும் அரசு உத்தரவில் உள்ளது. ஆனால் ரோடு தானம் பத்திரம் பதிவு செய்து கொடுத்தால் வரன்முறை செய்ய முடியும் என நகரமைப்பு அதிகாரிகள் விண்ணப்பங்களை திருப்பி அனுப்புகின்றனர். மாநகராட்சியில் இணைக்கப்பட்ட விரிவாக்க பகுதிகளில் தார் ரோடு இல்லை என்றும் சுட்டிக்கட்டி கோப்புகளை திருப்புகின்றனர். இப்படி மாநகராட்சி பகுதிகளில் வரன்முறை விண்ணப்பங்கள் மீது உத்தரவு வழங்க காலதாமதம் ஆவதால் வீடு கட்டும் ஆசையே போய்விட்டது என மதுரை மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எனவே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X