சுயதொழில் துவங்க முன்வரவேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சுயதொழில் துவங்க முன்வரவேண்டும்'

Added : அக் 10, 2021
Share
மதுரை -மதுரையில் இந்திய தொழில் மேம்பாட்டு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) மற்றும் பெட்கிராட் சார்பில் இலவச பேப்பர் கப், பேக், பாக்ஸ் தயாரிக்கும் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.பெட்கிராட் நிறுவனர் சுப்புராம் துவக்கி வைத்தார். செயலாளர் அங்குசாமி வரவேற்றார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தாட்கோ மேலாளர் கோவிந்தன் பேசுகையில்

மதுரை -மதுரையில் இந்திய தொழில் மேம்பாட்டு நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) மற்றும் பெட்கிராட் சார்பில் இலவச பேப்பர் கப், பேக், பாக்ஸ் தயாரிக்கும் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.பெட்கிராட் நிறுவனர் சுப்புராம் துவக்கி வைத்தார். செயலாளர் அங்குசாமி வரவேற்றார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தாட்கோ மேலாளர் கோவிந்தன் பேசுகையில் “சுயதொழில் துவங்க 18 - 65 வயது உள்ள ஆர்வமுள்ளோர் முன்வரலாம். குறிப்பாக பெண்கள் இதில் ஆர்வம் செலுத்த வேண்டும். திட்ட மதிப்பில் 30 சதவீதம் அரசு மானியம் பெறலாம்” என்றார்.தாட்கோ துணை மேலாளர் செலினா, இ.டி.ஐ.ஐ., அதிகாரி கார்த்திகேயன், பெட்கிராட் நிர்வாகிகள் சுருளி, கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சாராள் ரூபி ஏற்பாடு செய்தார். துணை தலைவர் மார்ட்டின் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X