பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
விபத்தில் முதியவர் பலிதண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 60. இவர், நேற்று டூ - வீலரில், தண்டையார்பேட்டை, ஐ.ஓ.சி., அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தண்டையார்பேட்டை,

விபத்தில் முதியவர் பலி

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 60. இவர், நேற்று டூ - வீலரில், தண்டையார்பேட்டை, ஐ.ஓ.சி., அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தண்டையார்பேட்டை, சாஸ்திரி நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான வெற்றிவேல், 40, என்பவரை கைது செய்தனர்.

கார்பென்டர் தற்கொலை

அரும்பாக்கம்: அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 47; கார்பென்டர். இவர், கடந்த, 5ம் தேதி, வழக்கம்போல் மது அருந்தி மனைவி பிரேமாவிடம் தகராறு செய்துள்ளார். பிரேமா கோபித்து, தன், 11 வயது மகனுடன், சூளைமேட்டில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றார். தனிமையில் மன உளைச்சலில் இருந்த யுவராஜ், நேற்று நள்ளிரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரும்பாக்கம் போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.27 பேருக்கு 'குண்டாஸ்'வேப்பேரி: சென்னை போலீசார், குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, கொலை, ஆள் கடத்தல், நிலம் அபகரிப்பு என, பல்வேறு வழக்குகளில் சிக்குவோர், ஓராண்டு ஜாமினில் வெளிவர முடியாதபடி

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்து வருகின்றனர்.அந்த வகையில், அக்., 2 - 8ம் தேதி வரை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, 27 பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். இவர்களில், 24 பேர் ரவுடிகள். சென்னை போலீசார், இந்த ஆண்டு மட்டும் இதுவரை, 315 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

அழுகிய ஆண் சடலம் மீட்பு

எழும்பூர்: எழும்பூர், பழைய கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள பாந்தியன் சாலை அருகே, முட்புதர் நிறைந்த பகுதியில், நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக, எழும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த எழும்பூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர்.

வைர வியாபாரியிடம் மோசடி
யானைக்கவுனி: மதுரை, புது மகாலிபட்டி ரோடு, நல்லமுத்து தெருவைச் சேர்ந்த சீனிவாசன், 45; வைர வியாபாரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெரம்பூர், ஜமாலியா, வடக்கு டவுன் பகுதியைச் சேர்ந்த சாகர்மால், 67, என்பவரிடம், சீனிவாசன், 16 லட்சத்து, 51 ஆயிரத்து, 645 ரூபாய் மதிப்பிலான வைரத்தை கொடுத்துள்ளார். அதில், சாகர்மால், 2.44 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். மீதி 14 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். சீனிவாசன், யானைக்கவுனி போலீசில் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து சாகர்மாலை கைது செய்தனர்.பெங்களூரு வாலிபருக்கு வெட்டுஅமைந்தகரை: கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் அன்பு, 23; பெங்களூரில் பிரபல தனியார் கூரியர் நிறுவனத்தில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். பெங்களூரில் இருந்து பார்சல்களை ஏற்றி, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கூரியர் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்த போது, அமைந்தகரை அருகில், ஆட்டோ ஒன்று அன்புவின் வாகனத்தை இடிப்பது போல் வந்தது. இதனால், ஆட்டோ ஓட்டுனருக்கும், அன்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர், அன்புவை சரமாரியாக தாக்கி, மறைத்து வைத்திருந்த, 'பிளேடால்' தாக்கி தப்பினார். அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர். ரயில் பாதையில் மரம் விழுந்ததுஎழும்பூர்: எழும்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 5:20 மணிக்கு, பலத்த மழை பெய்ததால், பாதையோரம் இருந்த மரம் தண்டவாளத்தில் விழுந்தது.

இதனால், தாம்பரம் -- கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள், மரத்தை வெட்டி அகற்றினர். மாலை, 6:05 மணிக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. இதனால், தாம்பரம் -- கடற்கரை இடையே, இருவழியிலும் ரயில் போக்குவரத்து, 45 நிமிடங்கள் தாமதமானதால் பயணியர் அவதிக்கு உள்ளாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X