பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை கடற்கரை -- தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை : ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை கடற்கரை -- தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கோடம்பாக்கம் -- தாம்பரம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 11:00 மணி, 11:30 மணி, 11:45 மணி, நண்பகல் 12:20 மணி, 12:40 மணி, மதியம் 1:40 மணி மற்றும் மதியம் 2:30 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் இன்றும், 17ம்

சென்னை : ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை கடற்கரை -- தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோடம்பாக்கம் -- தாம்பரம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 11:00 மணி, 11:30 மணி, 11:45 மணி, நண்பகல் 12:20 மணி, 12:40 மணி, மதியம் 1:40 மணி மற்றும் மதியம் 2:30 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் இன்றும், 17ம் தேதியும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நிலையத்திற்கு காலை 11:30, நண்பகல் 12:10 மணி, 12:30 மணி, மதியம் 1:50 மணி, 2:50 மணி, மாலை 3:30 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் இன்றும், 17ம் தேதியும்ரத்து செய்யப்பட்டுள்ளன திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை, 10:40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், இன்றும், 17ம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு, காலை 11:15 மணி, 12:00, மதியம் 1:00, 1:20 மணி, 2:00 மணி மற்றும் மாலை 3:00 மணிக்கு இயக்கப்படும்

மின்சார ரயில்கள், கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், 17ம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு காலை 10:15, 11:00, நண்பகல், 12:25 மணி, மதியம் 1:25 மற்றும் 2:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம், சென்னை கடற்கரை இடையே இன்றும், 17ம் தேதியும் ரத்து செய்யப்பட்டு உள்ளன திருமால்பூரில் இருந்து, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மதியம், 1:50 மணிக்கு, இன்றும், 17ம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X