தமிழ்நாடு

விளம்பர பலகை அகற்றம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை : வாகன ஓட்டிகளின் கவனம் சிதறும் வகையில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை, மாநகராட்சி அதிரடியாக அகற்றியது.பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க, உச்ச நீதிமன்றம்தடை விதித்தது. இதையடுத்து, சென்னையில், சாலையோரம், கட்டடத்தில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.இந்நிலையில், சில மாதமாக, வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, விபத்து ஏற்படுத்தும் வகையில், மீண்டும் விளம்பர
 விளம்பர பலகை அகற்றம்

சென்னை : வாகன ஓட்டிகளின் கவனம் சிதறும் வகையில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை, மாநகராட்சி அதிரடியாக அகற்றியது.பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைக்க, உச்ச நீதிமன்றம்தடை விதித்தது.

இதையடுத்து, சென்னையில், சாலையோரம், கட்டடத்தில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.இந்நிலையில், சில மாதமாக, வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, விபத்து ஏற்படுத்தும் வகையில், மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இது குறித்து, நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, பல இடங்களில் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.பொதுமக்களின் பெருமூச்சு அடங்குவதற்குள், மீண்டும் கிண்டி, வேளச்சேரி, தரமணி, சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம் பகுதியில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.

அதுவும், பேருந்து நிறுத்தம் மற்றும் நிலையங்களில் உள்ள மேற்கூரை, நிழற்குடைகளில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு, மொபைல் போன் எண் எழுதி விளம்பரம் செய்யப்பட்டது.இதில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் கைகோர்த்து செயல்பட்டனர்.இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, வேளச்சேரி மற்றும் ஓ.எம்.ஆரில் சில பகுதியில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.அதேபோல், இதர பகுதியில் உள்ள விளம்பரபலகைகளும் அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X