சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலை: கணவன் கைது

Added : அக் 10, 2021
Share
Advertisement
திருநின்றவூர் : திருநின்றவூரில் மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவனை, போலீசார் கைது செய்தனர்.திருநின்றவூர், சுதேசி நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன், 49. இவரது மனைவி செல்வி, 33. தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். செல்வி, வீட்டு வேலைகளை கவனிக்காமல் வெளியில் சென்று விடுவதாக கூறப்படுகிறது.இதனால் தம்பதி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.வழக்கம்போல், நேற்று முன்தினம்

திருநின்றவூர் : திருநின்றவூரில் மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவனை, போலீசார் கைது செய்தனர்.

திருநின்றவூர், சுதேசி நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன், 49. இவரது மனைவி செல்வி, 33. தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். செல்வி, வீட்டு வேலைகளை கவனிக்காமல் வெளியில் சென்று விடுவதாக கூறப்படுகிறது.இதனால் தம்பதி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறின் போது, சந்திரமோகன் மரக்கட்டையால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த செல்வி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், செல்வி இறந்த தகவலை தெரிவித்தனர்.இது குறித்த புகாரின் அடிப்படையில், திருநின்றவூர் போலீசார் நேற்று சந்திரமோகனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X