தமிழ்நாடு

மன அழுத்தத்தை குறைக்க பெண் போலீசாருக்கு பயிற்சி

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை : உலக மன நல நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மன அழுத்தத்திற்கு உள்ளான, போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு, அதை குறைப்பதற்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.இதை, கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கினார். போலீசாருக்கு, டாக்டர்கள் லட்சுமி, அபிலாஷா, சுஜாதா மற்றும் அபிஷேக் ஆகியோர் மன நல பயிற்சி அளித்தனர்.அதேபோல,

சென்னை : உலக மன நல நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மன அழுத்தத்திற்கு உள்ளான, போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு, அதை குறைப்பதற்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.

இதை, கமிஷனர் சங்கர் ஜிவால் துவக்கினார். போலீசாருக்கு, டாக்டர்கள் லட்சுமி, அபிலாஷா, சுஜாதா மற்றும் அபிஷேக் ஆகியோர் மன நல பயிற்சி அளித்தனர்.அதேபோல, ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும், 4,800 பெண் போலீசாருக்கு சமநிலை வாழ்வு முறை என்ற பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

வெள்ளி, சனி, ஞாயிறு என, மூன்று நாட்களுக்கு, 64 பேர் வீதம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பை, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், நேற்று மாலை தலைமையிடத்து இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி துவக்கினார். இதில், சமநிலை வாழ்வு முறை பயிற்சியுடன், காது, மூக்கு, தொண்டை, ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X