பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்., கலைக் கல்லுாரியில் 'போசான்' சங்க துவக்க விழா

Added : அக் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'போசான்' இயற்பியலாளர் பெயரில் சங்க துவக்க விழா நடந்தது.இயற்பியல் துறை சார்பில் இச்சங்கம் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்பை ஊக்கவிக்கவும் துவங்கப்பட்டது. 'போசான்' சங்கத் தலைவராக இயற்பியல் துறை 3ம் ஆண்டு மாணவர் அன்பரசன் தலைவராகவும், மாணவி திவ்யபாரதி, 2ம்

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'போசான்' இயற்பியலாளர் பெயரில் சங்க துவக்க விழா நடந்தது.

இயற்பியல் துறை சார்பில் இச்சங்கம் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்பை ஊக்கவிக்கவும் துவங்கப்பட்டது. 'போசான்' சங்கத் தலைவராக இயற்பியல் துறை 3ம் ஆண்டு மாணவர் அன்பரசன் தலைவராகவும், மாணவி திவ்யபாரதி, 2ம் ஆண்டு மாணவர் ஆனந்தராஜ் ஆகியோர் துணை தலைவர்களாக பொறுப்பேற்றனர்.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் சண்முகராஜூ தலைமை தாங்கினார். கடலுார் அரசு கல்லுாரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் திலக்குமார், 'குறைகடத்தி மற்றும் அதன் பயன்பாடு' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியை, இயற்பியல் துறைத் தலைவர் திருநாவுக்கரசு ஒருங்கிணைத்தார். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X