பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு கருத்தரங்கம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி : இந்திய தர நிர்ணய அமைவனம், வடலுார் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய, நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழா நடந்தது.வடலுார் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை தலைவர் கல்விராயர் தலைமை

குறிஞ்சிப்பாடி : இந்திய தர நிர்ணய அமைவனம், வடலுார் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய, நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழா நடந்தது.

வடலுார் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை தலைவர் கல்விராயர் தலைமை வகித்தார். விழாவை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பழனி துவக்கி வைத்துப் பேசினார். இந்திய தர நிர்னய அமைவனம் அதிகாரி கார்த்திக் பங்கேற்று ஐ.எஸ்.ஐ., தரச்சான்று மற்றும் ஹால்மார்க் தொடர்பாக பேசினார். உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கைலாஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.பின், திட்ட அலுவலர் பழனி தலைமையில் சிறுதானிய உணவுப் போட்டி நடந்தது. போட்டியை குள்ளஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரேவதி துவக்கி வைத்தார். தொடர்ந்து சிறுதானிய கண்காட்சி நடந்து. கெங்கைகொண்டான் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சசிகுமார், குறிஞ்சிப்பாடி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாய்ராபானு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X