பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி முன் கூட்டம் விரட்டியடித்தது போலீஸ்

Added : அக் 10, 2021
Share
Advertisement
சங்கராபுரம், : தேவபாண்டலத்தில் ஓட்டுச்சாவடி முன் குவிந்த கூட்டத்தை போலீசார் விரட்டியடித்தனர்..சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுச்சாவடியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது.ஏ.டி.எஸ்.பி., விஜய் கார்திக்ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, ஓட்டுச்சாவடி
 ஓட்டுச்சாவடி முன் கூட்டம் விரட்டியடித்தது போலீஸ்

சங்கராபுரம், : தேவபாண்டலத்தில் ஓட்டுச்சாவடி முன் குவிந்த கூட்டத்தை போலீசார் விரட்டியடித்தனர்..
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுச்சாவடியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது.ஏ.டி.எஸ்.பி., விஜய் கார்திக்ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, ஓட்டுச்சாவடி முன் தேவையின்றி நின்றவர்களை விரட்டியடித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சிமோகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஓட்டினை பதிவு செய்தனர்.

இதில், வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வெளியே கூட்டமாக நின்று, வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர்.அனைத்து வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் அப்பகுதியில் திரண்டு நின்றதால் பரபரப்பு நிலவியது. உடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.தகவலறிந்த கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, ஓட்டுப்பதிவு மையத்திலும், பள்ளி வளாகத்திற்கு வெளிப்புறமும் நின்று கொண்டிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X