பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் ஒன்றியத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு

Added : அக் 10, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் 218 ஓட்டுச்சாவடிகளில் நேற்று இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.கலெக்டர் ஸ்ரீதர் அம்மையகரம் மற்றும் ராயப்பனுார்

சின்னசேலம் : சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் 218 ஓட்டுச்சாவடிகளில் நேற்று இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.
காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.கலெக்டர் ஸ்ரீதர் அம்மையகரம் மற்றும் ராயப்பனுார் கிராமத்திற்குச் சென்று ஓட்டுப்பதிவு குறித்து ஆய்வு செய்தார்.மேலும், வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.ஓட்டுச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை பார்வையிட்டு, பொதுமக்களை காலதாமதமின்றி ஓட்டுப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவக்கொழுந்து, பி.டி.ஓ., துரைசாமி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X