பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பாளருக்கு ஓட்டு போட அனுமதி மறுப்பு பானையங்கால் ஊராட்சியில் பரபரப்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : பானையங்கால் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளருக்கு ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தியாகதுருகம் ஒன்றியத்துக்குட்பட்ட பானையங்கால் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மாரி மனைவி அங்கம்மாள், 51; இவர் நேற்று காலை 8:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஓட்டுப்போட சென்றார்.அவரின் பூத்

தியாகதுருகம் : பானையங்கால் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளருக்கு ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தியாகதுருகம் ஒன்றியத்துக்குட்பட்ட பானையங்கால் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மாரி மனைவி அங்கம்மாள், 51; இவர் நேற்று காலை 8:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஓட்டுப்போட சென்றார்.அவரின் பூத் சிலிப்பை வாங்கி வரிசை எண்ணை தேடியபோது அவருக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டதாக சீல் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஓட்டுச்சாவடி அலுவலர், அவரை ஓட்டு போட அனுமதி மறுத்தார்.அரசு வேலையில் இல்லாத தனக்கு எப்படி தபால் ஓட்டு போட முடியும் எனக் கூறி அங்கம்மாள் கதறி அழுதார்.

அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு ஓட்டுச் சாவடி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்முருகன் பிரச்னை குறித்து ஆய்வு செய்தார். அதில், அதே ஓட்டுச் சாவடியில் மணிமேகலை என்ற ஆசிரியைக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டு தவறுதலாக அங்கம்மாள் வரிசை எண்ணில் பதிவேற்றம் செய்து சீல் வைக்கப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து அங்கம்மாள் ஓட்டுப்போட அதிகாரிகள் அனுமதி அளித்ததை அடுத்து அவர் தனது ஓட்டை பதிவு செய்தார். இதன் காரணமாக நேற்று காலை பானையங்கால் ஊராட்சியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X