பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையம் பொது மக்கள் கோரிக்கை

Added : அக் 10, 2021
Share
Advertisement
புவனகிரி : புவனகிரியில் 36 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெற, ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் துவக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மேல்புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறும் வகையில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்பட்டது. தலா 30 க்கும்

புவனகிரி : புவனகிரியில் 36 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெற, ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் துவக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேல்புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறும் வகையில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்பட்டது. தலா 30 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள் பயனடைந்தனர்.

புவனகிரி ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியதால் புவனகிரியில் இயங்கிய சுகாதார நிலையத்தை 2016 ம் ஆண்டு கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இணைத்தனர்.இதனால் புவனகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயன்பெற்று வந்த, சிதம்பரம் அருகில் உள்ள சி.முட்லுார், தில்லைநாயகபுரம், லால்புரம், மேல் அனுவம்பட்டு, கீழமூங்கிலடி, மேல மூங்கிலடி, தையாக்குப்பம் மற்றும் தீத்தாம்பாளையம் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புவனகிரி வழியாக கிருஷ்ணாபுரம் செல்லும் அவலம் நீடிக்கிறது. புவனகிரியில் ஆரம்ப சுகாதார நிலையம் துவக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X