பொது செய்தி

தமிழ்நாடு

2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

Added : அக் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப் பதிவு விறு விறுப்பாக நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், காணை, கோலியனுார், மயிலம், மேல்மலையனுார், மரக்காணம், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களில் 2ம் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதில், 12 மாவட்ட கவுன்சிலர்கள், 135 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 316 கிராம ஊராட்சித் தலைவர்கள், 2,337 கிராம ஊராட்சி வார்டு
 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப் பதிவு விறு விறுப்பாக நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், காணை, கோலியனுார், மயிலம், மேல்மலையனுார், மரக்காணம், வல்லம் ஆகிய 6 ஒன்றியங்களில் 2ம் கட்ட தேர்தல் நேற்று நடந்தது.

இதில், 12 மாவட்ட கவுன்சிலர்கள், 135 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 316 கிராம ஊராட்சித் தலைவர்கள், 2,337 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2,800 பதவியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. 8,955 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர்.ஓட்டுப்பதிவிற்கு 1,379 ஓட்டுசாவடி மையங்கள் அமைக்கப்பட்டது.

நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணிக்கு முடிவடைந்தது. மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதித்தோர் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.இரண்டாம் கட்ட தேர்தலில், 3 லட்சத்து 12 ஆயிரத்து 501 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 16 ஆயிரத்து 640 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 87 என மொத்தம் 6 லட்சத்து 29 ஆயிரத்து 228 பேர் இடம் பெற்றனர்.கோலியனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி பூத்களில் நடைபெறும் ஓட்டுப்பதிவை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மோகன் பார்வையிட்டார்.அப்போது அவர் கூறுகையில், 'பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக காவல் துறையினர் பணி அமர்த்தி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகளில் 12 ஆயிரம் பேர் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடக்கிறது' என்றார்.கோலியனுார் ஒன்றியம், அத்தியூர் திருவாதி கிராமத்தைச் சேர்ந்த விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி, அங்குள்ள ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.நேற்று மாலை 3:00 மணி நிலவரப்படி, காணை ஒன்றியம் 67.68 சதவீதம், கோலியனுாரில் 68.62, மயிலத்தில் 73.85, மேல்மலையனுாரில் 71.75, மரக்காணத்தில் 71.60, வல்லத்தில் 70.56 சதவீதம் என 6 ஒன்றியங்களில் 70.64 சதவீத ஓட்டுகள் பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X