பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் மழை ஸ்ரீமுஷ்ணத்தில் 97 மி.மீ., பதிவு

Added : அக் 10, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.கடலுார் மாவட்டத்தில் நேற்று பகல் சுட்டெரிக்கும் வெயில் காய்ந்தது. மாலை வேளையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வண்டிப்பாளையத்தில் உள்ள சிவசுப்ரமணியர் கோவிலில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில் மின்னல் தாக்கியது. கோவிலின் கோபுரத்தில் இருந்த

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் மழை பெய்ததால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

கடலுார் மாவட்டத்தில் நேற்று பகல் சுட்டெரிக்கும் வெயில் காய்ந்தது. மாலை வேளையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வண்டிப்பாளையத்தில் உள்ள சிவசுப்ரமணியர் கோவிலில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில் மின்னல் தாக்கியது. கோவிலின் கோபுரத்தில் இருந்த சிற்பங்கள் உடைந்து விழுந்தன. தொடர்ந்து மழை பெய்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. கடலுார் நகரப்பகுதியில் நள்ளிரவுக்கு மேல் மின் வினியோகம் சீரானது.

கிராமங்களில் நேற்று மாலைதான் மின் வினியோகம் சீரானது. மின்வாரியத்தில் புகார் தெரிவிக்க அறிவித்த '1912', '18004254116' ஆகிய 2 எண்களும் பழுதடைந்ததால் புகார் அளிக்க முடியாமல் தவித்தனர். மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு: ஸ்ரீமுஷ்ணம் 97.2 மி.மீ., புவனகிரி 75, கீழ்செருவாய் 68, சேத்தியாதோப்பு 58.4, பெலாந்துறை 54.4, லால்பேட்டை 46, காட்டுமன்னார்கோவில் 44.4, பரங்கிப்பேட்டை 43.2,

சிதம்பரம் 38, தொழுதுார் 35, மேமாத்துார் 34, அண்ணாமலை நகர் 33.4, கடலுார் 30.6, கலெக்டர் அலுவலகம் 28.8, வேப்பூர் 25, லக்கூர் 24.2, குறிஞ்சிப்பாடி 23, காட்டுமயிலுார் 22, கொத்தவாச்சேரி 19, வடக்குத்து 14, விருத்தாசலம் 10, பண்ருட்டி 6.4, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 5, வானமாதேவி 4.6, குப்பனத்தம் 4.6மி.மீ., மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஸ்ரீமுஷ்ணத்தில் 97.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X