பொது செய்தி

தமிழ்நாடு

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் எஸ்.பி., சக்திகணேசன் ஆய்வு

Added : அக் 10, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அருகே பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., சக்திகணேசன் ஆய்வு மேற்கொண்டார்.குமராட்சி ஊராட்சி ஒன்றியம் ஜெயங்கொண்டபட்டினம் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. தி.மு.க., சங்கர், அ.தி.மு.க., சுந்தரமூர்த்தி, பா.ம.க., சசிக்குமார், தே.மு.தி.க., பன்னீர்செல்வம், சுயேச்சைகள் மூவர் உட்பட 9 பேர்
 பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் எஸ்.பி., சக்திகணேசன் ஆய்வு

சிதம்பரம் : சிதம்பரம் அருகே பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., சக்திகணேசன் ஆய்வு மேற்கொண்டார்.

குமராட்சி ஊராட்சி ஒன்றியம் ஜெயங்கொண்டபட்டினம் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. தி.மு.க., சங்கர், அ.தி.மு.க., சுந்தரமூர்த்தி, பா.ம.க., சசிக்குமார், தே.மு.தி.க., பன்னீர்செல்வம், சுயேச்சைகள் மூவர் உட்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.நேற்று காலை 6:00 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு இரவு 7:00 வரை நடந்தது. ஜெயங்கொண்டபட்டினம், பெராம்பட்டு, கீழகுண்டலபாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர்.

சிதம்பரம் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதற்றமான பகுதிகளில் எஸ்.பி., சக்திகணேசன் ஆய்வு மேற்கொண்டார். பெராம்பட்டு ஓட்டுச்சாவடியில் மின்விளக்கு இல்லாததால், அதிகாரிகள் மொபைல் போன் டார்ச்லைட் வெளிச்சத்தில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்காளர்களுக்கு மை வைத்து அனுப்பினர். மின்விளக்கு வசதி கூட ஏற்பாடு செய்யாததால் அலுவலர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X