பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

Added : அக் 10, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாகவும், அமைதியான முறையிலும் நடந்தது. மதியம் 3:00 மணி நிலவரப்படி 65.84 சதவீத ஓட்டுகள் பதிவானது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஒன்றியங்கள் உள்ளன. இதில் உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், திருநாவலுார் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு கடந்த 6ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடந்தது.
 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாகவும், அமைதியான முறையிலும் நடந்தது. மதியம் 3:00 மணி நிலவரப்படி 65.84 சதவீத ஓட்டுகள் பதிவானது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஒன்றியங்கள் உள்ளன.

இதில் உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், திருநாவலுார் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு கடந்த 6ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடந்தது. மீதமுள்ள கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது.மாவட்டத்தில், 1,554 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 195 ஊராட்சித் தலைவர், 91 ஒன்றிய கவுன்சிலர், 9 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 1,849 பதவியிடங்கள் உள்ளன. 265 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 1,584 பதவியிடங்களுக்கு 5,010 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 950 ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் நடந்தது. இங்கு 2 லட்சத்து 44 ஆயிரத்து 724 ஆண்கள், 2 லட்சத்து 45 ஆயிரத்து 270 பெண்கள், 101 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 90 ஆயிரத்து 95 வாக்காளர்கள் உள்ளனர்.நேற்று காலை 7:00 மணியளவில் ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறுகையில், '151 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றம் நிறைந்தவையாக கருதப்படுவதால்,

அங்கு வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.அனைத்து ஓட்டுப்பதிவு மையங்களிலும் எல்லாவித பாதுகாப்பு அம்சங்களும் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுகாதாரத்துறையினர் மூலமாக கொரோனா பரவல் தடுப்பு பணிகளும் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்களது ஓட்டுரிமையை பதிவு செய்து வருகின்றனர்' என்றார்.பிற்பகல் 3:00 மணியளவில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 69.73, சதவீதம் சின்னசேலம் 70.76, சங்கராபுரம் 62.64 தியாகதுருகம் 66.41, கல்வராயன்மலை 50.31 சதவீதம் என 5 ஒன்றியங்களிலும் 65.84 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X