பொது செய்தி

தமிழ்நாடு

க.அலம்பலத்தில் 71 வேட்பாளர்கள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : க.அலம்பலத்தில் ஓட்டுச்சாவடி மையத்திற்கு வெளியே ஒரு கி.மீ., தொலைவிற்கு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நின்றிருந்ததால் திருவிழா போன்று காணப்பட்டது.கள்ளக்குறிச்சி ஒன்றியம், க.அலம்பலம் ஊராட்சியில் 9 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளன. இப்பதவியிடத்திற்கு 56 வேட்பாளர்கள், ஊராட்சித் தலைவருக்கு 4 வேட்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலருக்கு 5 வேட்பாளர்கள், மாவட்ட

கள்ளக்குறிச்சி : க.அலம்பலத்தில் ஓட்டுச்சாவடி மையத்திற்கு வெளியே ஒரு கி.மீ., தொலைவிற்கு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் நின்றிருந்ததால் திருவிழா போன்று காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி ஒன்றியம், க.அலம்பலம் ஊராட்சியில் 9 கிராம ஊராட்சி வார்டுகள் உள்ளன. இப்பதவியிடத்திற்கு 56 வேட்பாளர்கள், ஊராட்சித் தலைவருக்கு 4 வேட்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலருக்கு 5 வேட்பாளர்கள், மாவட்ட கவுன்சிலருக்கு 6 வேட்பாளர்கள் என மொத்தம் 71 பேர் போட்டியிடுகின்றனர்.இங்கு, 5 முதல் 9 வரையிலான வார்டுகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு, அரசு நடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்பதிவு நடந்தது.

க.அலம்பலம் மெயின்ரோட்டில் இருந்து நடுநிலைப்பள்ளி வரை ஒரு கி.மீ., தொலைவிற்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நின்று தங்களது வேட்பாளர்களின் சின்னத்தை காண்பித்து வாக்காளிக்குமாறு ஆதரவு திரட்டினர். இதனால் அப்பகுதி திருவிழா போல் காணப்பட்டது.ஓட்டுப்பதிவு மிகவும் சீரான முறையில் நடந்ததால் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு தாமதமானது. இதனால், வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X