பொது செய்தி

தமிழ்நாடு

புத்தேரி வரதராஜ பெருமாள் சுவாமிசந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம், நான்காம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 10:00 மணியளவில் உலக மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை; காலை 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை 3:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு
 புத்தேரி வரதராஜ பெருமாள் சுவாமிசந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம், நான்காம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை 10:00 மணியளவில் உலக மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை; காலை 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. மாலை 3:00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை, மாலை 4:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.அலங்கரிக்கப்பட்ட மூலவர் சுவாமிகள் மற்றும் பிரகாரத்தில் உள்ள வெற்றி விநாயகர், மகா மாரியம்மன், ஆண்டாள் நாச்சியார், சந்திர மவுலீஸ்வரர், கருடாழ்வார் ஆகிய சுவாமிகள் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 7:00 மணியளவில் உற்சவர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. வரும், 16ம் தேதி, ஐந்தாம் சனிக்கிழமை அன்று பணம், நகை அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன்,

புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மூலவர் திருப்பதி சீனிவாச பெருமாள் அலங்காரத்திலும், உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜைகளை, சீனிவாச பட்டாச்சாரியார் செய்திருந்தார்.நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் வேணுகோபால சுவாமி சுவாமி திருவந்திபுரம் தேவனாதசுவாமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X