சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச் சீட்டில் சின்னம் 'மிஸ்சிங்'

Added : அக் 10, 2021
Share
Advertisement
மரக்காணம் : மரக்காணம் அடுத்த வடகோட்டிபாக்கம் கிராமத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரின் சின்னம் ஓட்டுச்சீட்டில் இல்லாததால் பரபரப்பு நிலவியது.மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட வடகோட்டிபாக்கம் கிராமத்தில் 6 வார்டுகள் உள்ளது. இதில் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாபு என்பவர் உட்பட 4 பேர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் பாபுவின் சின்னமான கார்

மரக்காணம் : மரக்காணம் அடுத்த வடகோட்டிபாக்கம் கிராமத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளரின் சின்னம் ஓட்டுச்சீட்டில் இல்லாததால் பரபரப்பு நிலவியது.

மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட வடகோட்டிபாக்கம் கிராமத்தில் 6 வார்டுகள் உள்ளது. இதில் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாபு என்பவர் உட்பட 4 பேர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் பாபுவின் சின்னமான கார் சின்னத்தைத் தவிர 3 நபர்களின் சின்னம் ஓட்டுச்சீட்டில் இருந்தது. பாபுவின் சின்னம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.தகவலறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உடனடியாக ஓட்டுச்சீட்டை மாற்றம் செய்து அதில் அவரது சின்னத்தை பதித்து ஓட்டுப்பதிவை துவங்க உத்தரவிட்டார். அதன் பிறகு ஓட்டுப்பதிவு துவங்கியது.மழை காரணமாக காலை முதல் ஓட்டுப்பதிவு மந்தமாக நடந்தது. மதியம் 1:00 மணிக்குப்பின் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X