சாலையில் தேங்கிய நீரில் துாண்டில் நாம் தமிழர் கட்சி நுாதன போராட்டம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி, சாலையில் தேங்கிய தண்ணீரில் துண்டில் போட்டு மீன் பிடிக்கும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர். விருத்தாசலம் பங்களா தெரு சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. விருத்தாசலம் பகுதியில்

விருத்தாசலம் : குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி, சாலையில் தேங்கிய தண்ணீரில் துண்டில் போட்டு மீன் பிடிக்கும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர். விருத்தாசலம் பங்களா தெரு சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

சாலையை சீரமைக்க கோரி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. விருத்தாசலம் பகுதியில் இரு தினங்களாக பெய்த மழையில், சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.சாலையை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில், சாலையில் தேங்கிய தண்ணீரில் துாண்டில் போட்டு மீன் பிடிக்கும் நுாதன போராட்டம் நேற்று காலை 11:00 மணியளவில் நடந்தது. சுற்றுச்சூழல் பாசறை செயலர் கதிர்காமன் தலைமை தாங்கினார்.தொகுதி ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், சுற்றுச்சூழல் பாசறை நிர்வாகிகள் விஜய், மூர்த்தி, கிளை பொறுப்பாளர்கள் விக்னேஷ், சரவணன், செல்வம், மோகன், ஆதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தைக்கு வராததால் காலை 11:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X