சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்தவரால் பரபரப்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டில் ஓட்டுபோடச் சென்ற வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தீக்குளிக்க பெட்ரோல் பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.மூங்கில்துறைப்பட்டு, தேவி நகரைச் சேர்ந்தவர் மெஹராஜ், 37; இவர், நேற்று அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட குடும்ப உறுப்பினர்கள் 11 பேருடன் சென்றார்.அவரது தாய் வயதானவர்

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டில் ஓட்டுபோடச் சென்ற வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தீக்குளிக்க பெட்ரோல் பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.

மூங்கில்துறைப்பட்டு, தேவி நகரைச் சேர்ந்தவர் மெஹராஜ், 37; இவர், நேற்று அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட குடும்ப உறுப்பினர்கள் 11 பேருடன் சென்றார்.அவரது தாய் வயதானவர் என்பதால் வரிசையில் செல்லமுடியாமல் கூட்டம் குறைந்தபின் ஓட்டுப்போடச் செல்லலாம் என ஓட்டுச்சாவடி அருகே உள்ள மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள், இங்கு நிற்ககூடாது என்று கூறியுள்ளனர்.அதற்கு, கூட்டம் குறைந்தபின் என் அம்மாவை ஓட்டுபோட கூட்டிச்செல்கிறேன் என மெஹராஜ் கூறியுள்ளார்.

போலீஸ்காரர்கள் இங்கு நிற்க கூடாது எனக் கூறி மெஹராஜை தள்ளியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த மெஹராஜ் வெளியே சென்று பெட்ரோல் பாட்டிலுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சிடைந்து பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி அவரையும் அவரது அம்மாவையும் அழைத்துச் சென்று ஓட்டு போட வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X