தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையத்தில் 5,000 மூட்டைகள் நனைந்து சேதம்

Added : அக் 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலத்தில் குறுவை அறுவடை சீசனுக்காக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறந்தது. இங்கு சி.சாத்தமங்கலம், சக்திவிளாகம் பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை
 நெல் கொள்முதல் நிலையத்தில் 5,000 மூட்டைகள் நனைந்து சேதம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலத்தில் குறுவை அறுவடை சீசனுக்காக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறந்தது. இங்கு சி.சாத்தமங்கலம், சக்திவிளாகம் பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்துள்ளனர். இங்கு கடந்த 29ம் தேதி வரை மட்டுமே கொள்முதல் செய்து தற்போது நிறுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் சுமார் 5, 000 மூட்டையளவில் நெல் நனைந்தன.மழையில் நனைந்த நெல் முளைத்து நாற்றாக வளர்ந்து வருகிறது. இதனால் அதிக செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் கவலையில் உள்ளனர். அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து தேங்கியுள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-அக்-202105:54:46 IST Report Abuse
Bhaskaran விவசாயிகளை பற்றி அதிகாரிகளுக்கு என்ன கவலை
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-அக்-202119:04:12 IST Report Abuse
வெகுளி ஐயோ என் மைண்டு அங்க போகுதே...... நெல் கொல், கொள் நெல்.... ஷப்பா ..... முடியல.....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-அக்-202119:01:23 IST Report Abuse
வெகுளி 5,000 மூட்டைகள்ன்னு சொல்லுங்க... அதில இருந்தது நெல்லா உமியான்னு மக்களுக்கு தெரியாதா?... விடியலின் உருட்டு வித்தியாச உருட்டு... விஞ்ஞான உருட்டு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X