பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக் கொண்டால் குலுக்கல் முறையில் பரிசு

Added : அக் 10, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் இன்று நடக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசிசெலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 10ம்தேதி, நகரில் 53 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில்தடுப்பூசி போடவேண்டிய நபர்களை

திண்டிவனம் : திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் இன்று நடக்கும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசிசெலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 10ம்தேதி, நகரில் 53 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில்தடுப்பூசி போடவேண்டிய நபர்களை கண்டறிந்து டோக்கன் வழங்கும் பணி நடந்தது.தடுப்பூசி போட வருபவர்கள் டோக்கனை முகாம் நடக்கும் மையத்தில் வழங்கி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.டோக்கன்களை ஒன்று சேர்த்து நாளை 11ம் தேதி காலையில் குலுக்கல் முறையில்தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக 5,000 ரூபாய் மற்றும் இரண்டாம் பரிசாக 3,000 ரூபாய், 3ம் பரிசாக 2,000 ரூபாய் மதிப்புள்ள ஜவுளி வழங்கப்படும்.

ஆறுதல் பரிசாக 6 பேருக்கு தலா 1,000 ரூபாய்க்கு ஜவுளியும் வழங்கப்பட உள்ளது.இத்தகவலை நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.விழுப்புரம்விழுப்புரத்தில், முதல் மற்றும் இரண்டாம் பரிசாக தலா ஒருவருக்கு 1 கிராம் தங்கக் காசும் மூன்றாம் பரிசாக 27 கிராம் எடையுள்ள வெள்ளி குங்குமச்சிமிழ், நான்காம் பரிசாக 5 பேருக்கும், 5ம் பரிசாக 3 பேருக்கும் பட்டுப்புடவை வழங்கப்படும். சிறப்பு பரிசு 20 பேருக்கு பேன்சி சாரீஸ், 10 பேருக்கு வேட்டி, சட்டை தொகுப்புகள் வழங்கப்பட உள்ளதாக கமிஷனர் சுரேந்திரஷா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X