பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு: கலெக்டர் ஆய்வு

Added : அக் 10, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவை கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் கீழ் அருங்குணம் ஊராட்சி அ.குச்சிப்பாளையம் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஓட்டுச் சாவடி மையம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் மணம்தவிழ்ந்தபுத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச் சாவடியை ஆய்வு செய்து, கொரோனா
 ஊரக உள்ளாட்சித் தேர்தல்  ஓட்டுப்பதிவு: கலெக்டர் ஆய்வு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவை கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் கீழ் அருங்குணம் ஊராட்சி அ.குச்சிப்பாளையம் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஓட்டுச் சாவடி மையம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் மணம்தவிழ்ந்தபுத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச் சாவடியை ஆய்வு செய்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வருவதை ஓட்டுச் சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி செய்யவேண்டும்.

மேலும் ஓட்டுச் சாவடி நுழைவு வாயிலில் வாக்காளர்களுக்கு கிருமி நாசினி அளித்து உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும், என்றார். பின், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டுப் பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தார். ஓட்டு எண்ணும் மையங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேஜைகள் அமைக்க அறிவுரை வழங்கினார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் மல்லிகா, உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X