கிரைம் செய்திகள் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்

Added : அக் 10, 2021
Share
மகள் மாயம்; தந்தை புகார்கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன், 50; இவரது, மகள் ராதிகா, 23; பி.எஸ்.சி., பட்டதாரி. இவர், கடந்த 6ம் தேதி இரவு வீட்டில் துாங்க சென்றவர், மறுநாள் காலை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நடராஜன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப் பதிந்து, ராதிகாவை தேடிவருகிறார்.உடல்

மகள் மாயம்; தந்தை புகார்
கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன், 50; இவரது, மகள் ராதிகா, 23; பி.எஸ்.சி., பட்டதாரி. இவர், கடந்த 6ம் தேதி இரவு வீட்டில் துாங்க சென்றவர், மறுநாள் காலை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நடராஜன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப் பதிந்து, ராதிகாவை தேடிவருகிறார்.

உடல் நலமின்றி பெண் சாவு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த எடைச்சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி தமிழரசி, 20; திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 6ம் தேதி தமிழரசிக்கு, வாந்தி, பேதி ஏற்பட்டு உடல்நிலை மோசமானது. புதுச்சேரி மருந்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

சாராயம் பதுக்கியவர் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வா.பெத்தாங்குப்பத்தில் வீட்டின் பகுதியில் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்த செல்வராணி,50; என்பவரை கைது செய்து 10 பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் தற்கொலை

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி, வி.பி.சிங்., தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் மகன் பிரகாஷ், 20; வயிற்று வலியால் அவதியடைந்த அவர், அதே பகுதியில் உள்ள மைதானத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தகராறில் 4 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு,37; இவரது வாத்து அதே பகுதியை சேர்ந்த குணசேகர் வீட்டில் மேய்ந்தது. ஆத்திரமடைந்த குணசேகரன், அவரது மனைவி அமுதா, அதே பகுதியை சேர்ந்த குமார், அவரது மனைவி ஜெயக்கொடி ஆகியோர் தங்கராசு, அவரது மனைவி சத்யாவை தாக்கினர். பலத்த காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் குணசேரகன்,50; அமுதா,45; குமார்,30; ஜெயக்கொடி,25; ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X