பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச் சாவடியில் குழப்பம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை, : அவலுார்பேட்டையில் ஓட்டுச் சாவடியில் ஒட்டப்பட்ட போஸ்டரில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்கள் விபரங்களுக்கு பதிலாக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்களின் விபரங்கள் குறிப்பிட்டதால் குழப்பம் ஏற்பட்டது.மேல்மலையனுார் ஒன்றியம் அவலுார்பேட்டையில் ஆண்கள் துவக்கப்பள்ளியில் 7வது வார்டு வாக்காளர்களுக்கான ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.இங்கு

அவலுார்பேட்டை, : அவலுார்பேட்டையில் ஓட்டுச் சாவடியில் ஒட்டப்பட்ட போஸ்டரில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்கள் விபரங்களுக்கு பதிலாக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்களின் விபரங்கள் குறிப்பிட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

மேல்மலையனுார் ஒன்றியம் அவலுார்பேட்டையில் ஆண்கள் துவக்கப்பள்ளியில் 7வது வார்டு வாக்காளர்களுக்கான ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.இங்கு ஓட்டுச் சாவடி நுழைவு வாயில் பகுதியில் சுவற்றில் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேட்பாளர்களின் பெயர், அவர்களது சின்னம் குறித்து எழுதிய போஸ்டர் ஒட்டப்படும்.அவலுார்பேட்டையில், நேற்று 7 வது வார்டு ஓட்டுச் சாவடியில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் அடங்கிய போஸ்டரில், தவறுதலாக, மாவட்ட குழு வேட்பாளர்களின் பெயர்களை எழுதி சின்னங்களை ஒட்டி இருந்தனர். இதனால், வாக்காளர்கள் குழப்பம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X