பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை விலை உயர்த்தாமல் விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை

Added : அக் 10, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்கும் சர்க்கரை விலையை உயர்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் சப்ளை செய்யும் ஒரு டன் கரும்புக்கு அரை கிலோ சர்க்கரையை குறைந்த விலையில் ஆலை நிர்வாகம் வழங்கி வருகிறது.இதுபற்றி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த திருமலை கூறுகையில்,

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்கும் சர்க்கரை விலையை உயர்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டுமென கோரியுள்ளனர்.

நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் சப்ளை செய்யும் ஒரு டன் கரும்புக்கு அரை கிலோ சர்க்கரையை குறைந்த விலையில் ஆலை நிர்வாகம் வழங்கி வருகிறது.இதுபற்றி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த திருமலை கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நெருக்கத்தில் விவசாயிகளுக்கு சர்க்கரை வழங்குகின்றனர். மாநில அரசு கரும்புக்கு அறிவித்த விலையில் விவசாயிகளுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் ஆலை நிர்வாகம் பாக்கி வைத்துள்ளது.

இதனால் விவசாயிகளுக்கு சர்க்கரையை இலவசமாகவே வழங்கலாம். இல்லையெனில் கடந்த ஆண்டை போல் ரூ. 28க்கு வழங்க வேண்டும். ரேஷன் கடையில் வழங்கும் ரூ. 25க்கு குறைவாக வழங்க வேண்டும். தீபாவளி நெருக்கத்தில் வழங்குவதால் பண்டிகைக்கு பயன்படுத்த முடியவில்லை. இந்த ஆண்டு உடனடியாக வழங்க வேண்டும். விலையை உயர்த்தினாலோ, தீபாவளி நெருக்கத்தில் வழங்கினாலோ சர்க்கரை வாங்காமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X