பொது செய்தி

தமிழ்நாடு

அழிச்சிக்குடியில் 80 சதவீதம் ஓட்டுப்பதிவு

Added : அக் 10, 2021
Share
Advertisement
புவனகிரி, : புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி ஒன்றிய கவுன்சிலர் இடைத் தேர்தலில் 80 சதவீதம் ஓட்டுபதிவானது.மேல்புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி 11வது வார்டு ஒன்றிய தி.மு.க., கவுன்சிலராக இருந்த ராமமூர்த்தி கொரோனா தொற்றால் இறந்தார். நேற்று நடந்த இடைத் தேர்தலில் கிளாவடி நத்தம், வத்ராயன்தெத்து மற்றும் அழிச்சிக்குடி ஊராட்சிகளை உள்ளடக்கி 11 இடத்தில் ஓட்டுச் சாவடி அமைத்து

புவனகிரி, : புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி ஒன்றிய கவுன்சிலர் இடைத் தேர்தலில் 80 சதவீதம் ஓட்டுபதிவானது.மேல்புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி 11வது வார்டு ஒன்றிய தி.மு.க., கவுன்சிலராக இருந்த ராமமூர்த்தி கொரோனா தொற்றால் இறந்தார்.

நேற்று நடந்த இடைத் தேர்தலில் கிளாவடி நத்தம், வத்ராயன்தெத்து மற்றும் அழிச்சிக்குடி ஊராட்சிகளை உள்ளடக்கி 11 இடத்தில் ஓட்டுச் சாவடி அமைத்து தேர்தல் நடந்தது. புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஆண்கள் 2, 293 ஆண்கள், 2, 272 பெண்கள் உட்பட 4, 565 வாக்காளர்கள் உள்ளனர். இதில் காலையில் இருந்து அமைதியான முறையில் நடந்த தேர்தலில் 1,838 ஆண்கள், 1,817 பெண்கள் உட்பட 3,655 பேர் ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம் 80.2 ஆகும். இதில் பெண்களை விட 21 ஆண்கள் கூடுதலாக ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவை கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X